கம்பராமாயணம் 4722 · கிட்கிந்தா 15.26

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வள்ளியும் மரங்களும் மலையும் மண் உறத்
தெள்ளும் நுண் பொடி படக் கடிது செல்கின்றான்
தள்ளுவன் கால் பொரத் தரணியில் தவழ்
வெள்ளி அம் பெருமலை பொருவும் மேனியான்.

பொருள் · Meaning in Tamil

வள்ளியும் - கொடிகளும்; மரங்களும் - பலவகையான மரங்களும்; மலையும் - மலைகளும்; மண் உற - மண்ணோடு மண்ணாகும்படி; தெள்ளு நுண் பொடிபட - தெள்ளிய நுண்மையான பொடியாகுமாறு; கடிது செல்கின்றான் - விரைவாகச் சென்றான்; தள்ளு வன்கால் பொர - எல்லாவற்றையும் தாக்கித் தள்ளவல்ல வலிய காற்று மோதுவதால், தரணியில் தவழ் - பூமியில் தவழ்ந்து வருகின்ற; வெள்ளி அம் பெருமலை - அழகிய வெள்ளிமயமான கைலாய மலையை; பொருவும் மேனியான் - ஒத்த உருவமுடையவனும் (ஆக).

சம்பாதி நடந்து வருகையில் வழியிலுள்ள கொடிகளும் மரங்களும் மலைகளும் பொடியாயினவென அவனது வேகத்தையும் வலிமையையும் கூறினார்.

தரணியில் தவழ் வெள்ளியம் பெருமலை: இல்பொருளுவமை. சம்பாதிக்கு வெள்ளிமலை உருவின் பெருமையாலும் நிறத்தாலும் உவமையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Creepers, trees and mountains were ground into the earth
  2. as fine sifted dust as he went swiftly on,
  3. his body like the great lovely silver mountain
  4. creeping over the earth, driven by a strong pushing wind.

What the poem says

Campāti's huge body crushes everything in his way. He looks like Kailāsa, the silver mountain, crawling across the earth, an image chosen for his size and pale colour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaḷḷiyum maraṅkaḷum malaiyum maṇ uṟat
teḷḷu nuṇ poṭipaṭa kaṭitu celkiṉṟāṉ
taḷḷu vaṉ kāl porat taraṇiyil tavaḻ
veḷḷi am peru malai poruvu mēṉiyāṉ.