கம்பராமாயணம் 4721 · கிட்கிந்தா 15.25

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினால்
மழுங்கிய நெடுங்கணின் வழங்கும் மாரியான்
அழும் குரல் முழக்கினான் அவனி ஆறு என
முழங்கிவந்து இழிவது ஓர் முகிலும் போல்கின்றான்.

பொருள் · Meaning in Tamil

உழும் கதிர் மணி - சாணை பிடித்த ஒளிபொருந்திய மணிகளைக் கொண்டு செய்த; அணி உமிழும் மின்னினான் - அணிகலன்கள் ஒளிவிடுகின்ற மின்னலையுடையவனும்; மழுங்கிய நெடுங்கணின் - ஒளி மங்கிய தன் நீண்ட கண்களிலிருந்து; வழங்கும் மாரியான் - வழிகின்ற நீர்த்துளிகளையுடையவனும்; புழுங்குவான் அழுங்கினான் - துயரத்தால் மனம் வருந்துபவனாய் வாய்விட்டுக் கதறுபவனும்; புடவி மீதினில் - பூமியின்மேல், முழங்கிவந்து - குமுறிக் கொண்டே வந்து; இழிவது - கீழே இறங்குவதான; ஓர் முகிலும் போல்கின்றான் - ஒரு மேகத்தை ஒத்திருப்பவனும்.

மின்னியிடித்து நீரைச் சொரிகின்ற மேகம், இரத்தின அணிகலன்களால் ஒளி வீசிக் கொண்டும், வாயினால் கதறிக் கொண்டும், கண்ணீரைச் சொரிந்து கொண்டுமிருக்கின்ற சம்பாதிக்கு உவமையாம். இல்பொருள் உவமை.

சம்பாதி பெரிய உருவத்துடன் பூமியின்மேல் நடந்து த்ய பூமியின் மேல் இழியும் மேகம் போன்றான் என்று குறித்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With lightning flashing from ornaments of polished, radiant gems,
  2. with rain pouring from his long, dimmed eyes,
  3. grieving and wailing, he was like
  4. a cloud that comes down thundering upon the earth.

What the poem says

Campāti is compared to a storm cloud come down to earth: his jewels flash like lightning, his wails are thunder, and his tears are rain. Since clouds do not walk the earth, the commentary calls this a comparison with something that does not exist.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḻum katir maṇi aṇi umiḻum miṉṉiṉāṉ
maḻuṅkiya neṭuṅ kaṇiṉ vaḻaṅkum māriyāṉ
puḻuṅkuvāṉ aḻuṅkiṉāṉ puṭavimītiṉil
muḻaṅki vantu iḻivatu ōr mukilum pōlkiṉṟāṉ.