கம்பராமாயணம் 4720 · கிட்கிந்தா 15.24

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மிடல் உடை எம்பியை வீட்டும் வெம் சினப்
படை உளர் ஆயினார் பாரில் யார்?'எனா
உடலினை வழிந்து போய் உவரி நீர் உகக்
கடலினைப் புரையுறும் அருவிக் கண்ணினான்.

பொருள் · Meaning in Tamil

மிடலுடை எம்பியை - வலிமையுடைய என்தம்பியை; வீட்டும் - அழிக்கக் கூடிய; வெஞ்சினப் படையுளர் ஆயினார் - கொடிய கோபத்தோடு தாக்கும் படைக்கலங்களைக் கொண்டவர்; பாரில் யார்? - இந்த உலகத்தில் எவர் உள்ளனர்? எனா - என்று சொல்லி வருந்தி; உடலினை வழிந்துபோய் - உடம்பிலிருந்து கீழே விழுந்துபோய்; உவரி நீர் உக - கடலில் சேருமாறு; கடலினைப் புரை உறும் அருவிக் கண்ணினான் - அந்தப் பெரிய கடலைப் போல நீர்ப்பெருக்குடைய கண்களையுடையவனும்.

தன் அன்பான தம்பியின் மரணத்தை நினைந்து சம்பாதி கடல்போலக் கண்ணீரைப் பெருக்கினான் என்பது. உடலினை: உருபு மயக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Who on earth has weapons and fierce anger
  2. that could destroy my mighty brother?" he said,
  3. and the tears streamed down his body and spilled into the salt sea,
  4. from eyes that poured like waterfalls, a match for the ocean.

What the poem says

Campāti cannot imagine anyone strong enough to kill Caṭāyu. His tears flow so heavily that the poet says they run into the sea, rivalling the ocean itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'miṭaluṭai empiyai vīṭṭum veñ ciṉam
paṭaiyuḷar āyiṉār pāril yār?' eṉā
uṭaliṉai vaḻintu pōy uvari nīr ukak
kaṭaliṉaip puraiyuṟum aruvik kaṇṇiṉāṉ.