கம்பராமாயணம் 4719 · கிட்கிந்தா 15.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முறையுடை எம்பியார் முடிந்த ஆ - நீதிமுறையைத் தனக்கு உரிமையாகவுடைய என் தம்பி சடாயு இறந்தவாறு என்னே! எனா - என்று; பறை இடு நெஞ்சினன் - பறையடிப்பது போலத்துடிக்கின்ற நெஞ்சையுடையவனும்; பதைக்கும் மேனியன் - தவித்துத் துடிக்கும் உடம்பையுடையவனும்; இறையுடைக் குலிசம் வேல் எறிதலால் - தேவேந்திரன் தன் வச்சிரப் படையை வீசியெறிந்ததால்; முனம் சிறை அறும் மலை என - முற்காலத்தில் சிறகுகள் அறுபட்டுப்போன மலையைப் போல; செல்லும் செய்கையான் - செல்லும் செயலையுடையவனானான்.
முற்காலத்தில் மலைகள் இறகுள்ளனவாயிருந்து பறந்த மக்களின்மேல் விழுந்து அழித்ததால், இந்திரன் அவற்றின் சிறகுகளை அரிந்தான் என்பது புராணக் கதை. சிறகுகள் அறுபட்ட மலை சிறகுகள் கரிந்துவிட்ட சம்பாதிக்கு ஏற்ற உவமையாம்.
எம்பியார் - பால்வழுவமைதி (பாசத்தால் வந்தது); தம்பி இளையவனாதலால் எம்பி என்று இருப்பது முறை; 'ஆர்' என்ற மரியாதைப் பன்மை விகுதி சேர்த்து வழு; தம்பியை நினைத்த பாசத்தால் எம்பியார் என அமைந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "How did my brother, who held to what was right, come to his end?" he cried,
- his heart pounding like a drum, his body trembling;
- he moved like a mountain whose wings were cut off long ago
- when the Lord hurled his thunderbolt-spear.
What the poem says
An old legend says mountains once had wings and flew about crushing people, until Indra cut off their wings with his thunderbolt. The wingless, giant Campāti looks like one of those mountains. He calls his younger brother by a respectful plural form, a slip of grammar the commentary excuses as born of affection.