கம்பராமாயணம் 4724 · கிட்கிந்தா 15.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அனுமன் சம்பாதியை மேலும் நோக்கி) வெங்கதம் வீசிய மனத்தன் - கொடிய கோபத்தை நீக்கிய மனத்தையுடையவனும்; விம்மலன் - (துக்கத்தால்) பொருமுகின்றவனும்; பொங்கிய சோரி நீர் பொழியும் - பொங்கும் மழைபோல நீரைச் சொரிகின்ற; கண்ணினன் - கண்களையுடையவனுமாயிருக்கின்றான் (ஆதலால், இவன்), சங்கையில் சழக்கு இலன் - மனத்திலே சிறிதும் குற்றம் இல்லாதவன்; என்னும் தன்மையை - என்பதை; இங்கித வகையினால் - முகத்தின் குறிப்புகளினால்; எய்த நோக்கினான் - நன்றாக அறிந்து கொண்டான்.
அனுமன், பிறர் முகக் குறிப்பறிந்து உண்மையையுணர்பவனாதலால், சீற்றமில்லாமலும், துயரத்தால் கண்ணீரைப் பெருக்கியும் வருகின்ற சம்பாதியைக் கண்டு அவன் குற்றமற்றவன் என்பதைத் தெளிந்தான் என்பது.
இங்கித வகை: குறிப்பால் உணரும் தன்மை. சங்கை: மனம்; சழக்கு: குற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His heart had cast off fierce anger; he was sobbing;
- his eyes poured out a flood of tears like rain;
- that he was free of guile in his mind
- Aṉumaṉ perceived clearly from the signs in his face.
What the poem says
Aṉumaṉ, skilled at reading faces, looks again and sees no anger in the great bird, only sobbing and floods of tears. He realises that this is no demon in disguise but an innocent creature in grief.