கம்பராமாயணம் 4725 · கிட்கிந்தா 15.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நோக்கினன் நின்றனன் - (சம்பாதியின் வருகையை) நோக்கி எதிர் நின்றவனும்; நுணங்கு கேள்வியான் - நுட்பமான கல்வி கேள்விகளையுடையவனுமாகிய அனுமன்; வாக்கினால் ஒரு மொழி - தன் வாயினால் ஒரு சொல், வழங்குறாதமுன் - சொல்வதற்கு முன்னமே (சம்பாதி); தாக்க அருஞ் சடாயுவை - யாரும் எதிர்த்துப் போர் செய்ய முடியாத வலிமையுடைய சடாயுவை; தருக்கினால் - சூரத்தனத்தால், உயிர் நீக்கினர் யார் - உயிரைப் போக்கியவர் யார்? அது நிரப்புவீர் - அதை விரிவாக எடுத்துக் கூறுங்கள்; என்றான் - என்று கேட்டுக் கொண்டான்.
நிரப்புவீர்: அனுமன் ஒருவனை உயர்வு கருதிப் பன்மையில் கூறியது என்றும், அங்கிருந்த மற்ற வானர வீரர்களை உளப்படுத்தியது என்றும் கொள்ளலாம். நிரப்புதல்: குறையின்றி முழுவதும் கூறல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he stood looking, before the one of subtle learning
- could utter a single word,
- the bird said, "Who in their arrogance took the life
- of Caṭāyu, whom none could withstand? Tell it in full."
What the poem says
Before Aṉumaṉ can speak, Campāti asks who could have killed the invincible Caṭāyu. He addresses Aṉumaṉ in the respectful plural, or perhaps all the monkeys together, and asks for the whole story.