கம்பராமாயணம் 4726 · கிட்கிந்தா 15.30

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றது
பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்று ஆகுமால்'
என்ன மாருதி எதிர் எருவை வேந்தனும்
தன்னை ஆம் தன்மையைச் சாற்றல் மேயினான்.

பொருள் · Meaning in Tamil

(அது கேட்டு) மாருதி - அனுமன்; உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் - உன்னைப் பற்றி நீ உள்ளபடியே கூறினால், பின்னை - பிறகு; யான் உற்றதை நிரப்புதல் - நான் நடந்த வரலாற்றை விரிவாகக் கூறுவது, பிழைப்பு இன்றாகும் - தவறு இல்லாததாகும்; என்ன - என்று (சம்பாதியை நோக்கிக்) கூற; எதிர் - எதிரே நின்ற அனுமனிடம்; எருவை வேந்தனும் - கழுகரசனான சம்பாதியும்; தன்னை ஆம் தன்மையை - தன்னைப் பற்றிய வரலாற்றை, சாற்றல் மேவினான் - சொல்லத் தொடங்கினான்.

ஆல்: ஈற்றசை. பிழைப்பு - தவறு. முதலடி முற்றுமோனையாகவுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If you tell me truly who you are, then afterwards
  2. for me to tell in full what happened would be without fault,"
  3. so Māruti said; and facing him, the king of the vultures
  4. began to tell what he himself was.

What the poem says

Aṉumaṉ, still cautious about this huge stranger, asks him to say who he is before the story of Caṭāyu's death is told. Campāti agrees and begins to explain who he is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uṉṉai nī uḷḷavāṟu uraippiṉ uṟṟataip
piṉṉai yāṉ nirapputal piḻaippu iṉṟākumāl'
eṉṉa māruti etir eruvai vēntaṉum
taṉṉai ām taṉmaiyaic cāṟṟal mēviṉāṉ.