கம்பராமாயணம் 4727 · கிட்கிந்தா 15.31

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மின் பிறந்தால் என விளங்கு எயிற்றினாய்!
என் பிறந்தார்க்கு இடை எய்தலாத? என்
பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன்
முன்பு இறந்தேன் என முடியக் கூறினான்.

பொருள் · Meaning in Tamil

மின் பிறந்தாலென - (சம்பாதி அனுமனை நோக்கி) மின்னல் தோன்றியது போல; விளங்கு எயிற்றினாய் - விளங்குகின்ற பற்களையுடையவனே! பிறந்தார்க்கு இடை எய்தலாத என் - உடன் பிறந்தவர் பொருட்டுச் சோர்தல் அடையாத நிலை ஏது? என் பின்பிறந்தான் - எனக்குப் பின் பிறந்தவனாகிய; துணை பிரிந்த - (என்) சகோதரனைப் பிரிந்த; பேதையேன் - எளியவனாகிய நான்; முன் பிறந்தேன் - (அந்தச் சடாயுவுக்கு) அண்ணனாகப் பிறந்தேன்; என - என்று; முடியக் கூறினான் - தன் வரலாற்றை விளங்கக் கூறினான்.

சடாயு என்பவன் தன் தம்பி; நான் அவனுக்கு முன் பிறந்தவன் என்பது.

'இளையவன் இறக்க மூத்தவனாகிய நான் உயிரோடு இருக்கின்றேனே என்ற இரக்கம் தோன்றுமாறு 'என் பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன் முன் பிறந்தேன்' என்றான் சம்பாதி. உடன்பிறந்தவர்கள் துன்பமுற நேர்ந்தால் சோர்வடையாத நிலை உண்டோ என்று சம்பாதி கேட்டான். சடாயுவின் மரணத்தால் தனக்கு ஏற்பட்டுள்ள சோர்வைச் சம்பாதி இவ்வாறு புலப்படுத்துகிறான். இடைகுல்) - சோர்தல். என்பு: ஆகுபெயர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "You whose shining teeth flash like lightning born!
  2. Who is there who does not falter for his own kin? I,
  3. the wretch who has lost my companion, the one born after me,
  4. was born before him," so he told it plainly.

What the poem says

Campāti reveals that he is Caṭāyu's elder brother. The way he puts it carries the pain of an elder outliving the younger: he is the wretched one who was born first and is still alive. Who, he asks, does not break down when a brother suffers?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉ piṟantāleṉa viḷaṅku eyiṟṟiṉāy!
eṉ piṟantārkku iṭai eytalāta? eṉ
piṉ piṟantāṉ tuṇai pirinta pētaiyēṉ
muṉ piṟantēṉ eṉa muṭiyak kūṟiṉāṉ.