கம்பராமாயணம் 4728 · கிட்கிந்தா 15.32

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கூறிய வாசகம் கேட்ட கோது இலான்
ஊறிய துன்பத்தின் உவரி உள் புகா
ஏறினன் உணர்த்தினன் இகல் இராவணன்
வீறிய வாள் இடை விளிந்த ஆறு எலாம்.

பொருள் · Meaning in Tamil

கூறிய வாசகம் கேட்ட - சம்பாதி சொன்னவற்றைக் கேட்ட; கோது இலான் - குற்றமற்றவனான அனுமன்; ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா - மிக்க துன்பமாகிய கடலினுள் மூழ்கி; ஏறினன் - அதிலிருந்து ஒருவாறு கரையேறினவனாகி; இகல் இராவணன் - (சடாயுவோடு) போர் புரிந்த இராவணன்; வீறிய வாளிடை - வீசிய வாளினால்; விளிந்தது ஆம் - உன் தம்பியின் மரணம் நேர்ந்ததாகும்; என்றான் உணர்த்தினன் - என்று தெரிவித்தான்.

சம்பாதியின் சொல் மனத்தைக் கரையச் செய்ததால் அதைக் கேட்ட அனுமன் துயரக் கடலிலே மூழ்கிப் பின் ஒருவாறு தெளிந்தான் என்பது.

வீறிய வாள்: இராவணனுக்குச் சிவன் தந்த சந்திரகாசமென்னும் வாள்; எனவே, பிறிதொன்றற்கு இல்லாத சிறப்புடையது.

புகா: செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The faultless one, hearing the words he spoke,
  2. sank into the sea of welling grief,
  3. then rose from it and told him: "It was by the proud sword
  4. of warlike Irāvaṇaṉ that he died."

What the poem says

Moved by Campāti's words, Aṉumaṉ is overcome himself before he can answer. Then he tells him that Caṭāyu was killed by Irāvaṇaṉ's sword. The commentary identifies it as Candrahāsa, the matchless sword given to Irāvaṇaṉ by Śiva.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṟiya vācakam kēṭṭa kōtu ilāṉ
ūṟiya tuṉpattiṉ uvariyuḷ pukā
ēṟiṉaṉ uṇarttiṉaṉ 'ikal irāvaṇaṉ
vīṟiya vāḷiṭai viḷintatu ām' eṉṟāṉ.