கம்பராமாயணம் 4729 · கிட்கிந்தா 15.33

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ் உரை கேட்டலும் - (அனுமன் கூறிய) அந்தச் சொற்களைக் கேட்டதும் (சம்பாதி); அசனி ஏற்றினால் - பேரிடியினால்; தவ்விய கிரி என - சிதைந்த மலை போல; தரையில் வீழ்ந்தனன் - தரைமீது விழுந்தான்; வெவ் உயிரா - வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு; உயிர் பதைப்ப - உயிர்துடிக்க; விம்மினான் - தேம்பி வருந்தியவனாகி; இவ்உரை இவ்உரை - இந்த இந்தச் சொற்களை; எடுத்து இயம்பினான் - எடுத்து எடுத்துச் சொல்லிப் புலம்பினான்.

ஏறு: சிறந்ததையும், பெரியதையும் 'ஏறு' என்றல் மரபு. கீழே விழுதலும், வெப்பமாகப் பெருமூச்செறிதலும், உயிர் பதைத்தலும், விம்முதலும் துயரத்தின் மெய்ப்பாடுகள். இவ்வுரை இவ்வுரை என்ற அடுக்கு: சோகத்தின் பலவற்றைக் கூறுவதைக் குறிக்கும்.

தவ்வுதல்: சிதைதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The moment he heard those words, like a mountain shattered
  2. by a great thunderbolt he fell to the ground;
  3. breathing hot breaths, his life quivering, he sobbed,
  4. and spoke these words and these, over and over.

What the poem says

Campāti collapses at the news like a lightning-struck mountain. The commentary lists the classic outward signs of grief shown here: falling, hot sighs, trembling and sobbing. The repeated "these words and these" signals the many laments that follow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avvurai kēṭṭalum acaṉi ēṟṟiṉāl
tavviya kiri eṉat taraiyiṉ vīḻntaṉaṉ
vev uyirā uyir pataippa vimmiṉāṉ
iv urai iv urai eṭuttu iyampiṉāṉ.