கம்பராமாயணம் 4730 · கிட்கிந்தா 15.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விளையா நீள் சிறகு இன்றி - (என் தம்பியே) எதற்கும் தடைபடாத என்னுடைய நீண்ட சிறகுகள் இல்லாமல்; வெந்து உக - (சூரியக் கதிர்களால்) அடியோடு வெந்தொழிய; தளை ஆனேன் - (விரும்பியபடி பறந்து செல்ல முடியாமல்) தளைப்படுத்தப்பட்டுள்ள எனது; உயிர் போதல் தக்கது - உயிர் நீங்குதலே தகுதியானது; வளையா நேமியன் - கோணாத ஆணைச் சக்கரத்தையுடைய தசரத மன்னனின்; வன்மை சால் வலிக்கு - மிகுந்த உக்கிரமான வலிமைக்கு, இளையானே - குறையாத ஆற்றலுடையவனே! இது என்ன மாயமோ - (நீ இறந்து) இச் செய்கை என்ன மாயமோ? (அறிய முடியவில்லையே).
ஆல்: ஈற்றசை; தேற்றமும் ஆம்.
பறவைகளுக்கு மிகத் தேவையான உறுப்பாகிய சிறகுகளை இழந்த பின்பும் ஒரு பயனுமில்லாமல் நான் உயிருடன் வீணே விழுந்து கிடக்கின்றேன்; ஆனால், தசரத மன்னனது வலிமைக்கும் குறையாத வலிமையுள்ள நீ மூத்தவனான எனக்கு முன்னே இறந்தது என்ன மாயம்' என்று சம்பாதி புலம்பினான்.
பூமி முழுவதும் வளையாத ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி ஆட்சி செய்தவனாதலால் தசரதன் 'வளையா நேமியன்' எனப்பட்டான்.
ஓகாரம் இரக்கமுணர்த்தும். வளையா நேமியன் என்பதற்குத் திருமால், சூரியன் என்று பொருள் கொண்டவரும் உளர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "My long wings, never stopped by anything, burnt away and gone,
- I who am bound fast, it is right that my life should go;
- but you, younger brother, not less in mighty strength
- than the king of the unbending wheel, what illusion is this?"
What the poem says
Campāti's lament begins. He is the one whose wings are burnt, useless and grounded, and he should be the one to die. Instead his younger brother, as mighty as King Tacarataṉ, whose rule over the world never bent, has died before him. Some read "the one of the unbending wheel" as Viṣṇu or the sun.