கம்பராமாயணம் 4731 · கிட்கிந்தா 15.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மலரோன் நின்றுளன் - (திருமாலின் நாபித்) தாமரை மலரில் தோன்றியவனான பிரமன் இன்னும் அழியாது இருக்கின்றான்; மண்ணும் விண்ணும் உண்டு - பூமியும் வானமும் உள்ளன; உலையா நீடு அறம் - அழியாது வளரும் தருமமும்; இன்னும் உண்டு - இன்னும் நிலைபெற்றுள்ளது; நிலை ஆர் கற்பமும் - நிலை பொருந்திய பிரமகற்பம் என்ற காலமும்; நின்றது - இன்னும் முடிவடையாது உள்ளது (ஆனால்); இன்று நீ இலை ஆனாய் - இன்றோ நீ மாத்திரம் இல்லாது அழிந்தாய்; இது என்ன தன்மையோ - இது என்ன முறையோ?
அரோ: ஈற்றசை.
நீண்ட ஊழிக் காலம் வரை நிலைத்தற்குரிய நீ இறந்தாயே எனச் சம்பாதி இரங்கியவாறு. பிரமனும், மண்ணும், விண்ணும், அறமும், கற்ப காலமும் அழியுமானால் நீயும் அழிவது நியாயமாகும்; அவை அழியாதிருக்க நீ மட்டும் அழிந்தது முறையாகாது என்பது சம்பாதி கருத்து.
ஓகாரம்: எதிர்மறை; ஐயமும் ஆம்.
கற்பம்: பிரமகற்பம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The lotus-born god still stands; earth and heaven remain;
- unfailing, enduring dharma is still here;
- the steadfast age of Brahmā has not ended; and today
- you are gone. What kind of order is this?"
What the poem says
Campāti protests that everything meant to last until the end of a cosmic age is still in place: Brahmā, earth and sky, dharma, the age itself. Caṭāyu was meant to last as long as they do, so it is not right that he alone should perish.