கம்பராமாயணம் 4732 · கிட்கிந்தா 15.36

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்
திடு அந் நாள்வந்து இருவோம் உளோம் எனை
விட நீயே தனி சென்ற வீரமும்
கடனோ எம் கலுழற்கும் மேன்மையாய்.

பொருள் · Meaning in Tamil

வெங் கலுழற்கும் மேன்மையாய் - வலிமை மிக்க கருடனுக்கும் மேம்பட்டவனே! அம் முந்து நாள் - முன்னொரு காலத்தில்; அண்டம் இரண்டும் உயிர்த்திடும் - இரண்டு முட்டைகள் உண்டாக்க; உடனே இருவேமும் வந்து எய்தி - ஒருவர்பின் ஒருவராக நாம் இருவரும் உடன் பிறப்பாகப் பிறந்து; யான் விட - (இப்போது) என்னை விட்டுப் பிரிந்து; நீயே தனிச் சென்ற வீரமும் - நீ மட்டும் தனியாக இறந்து போன வீரச் செயலும்; கடனே - முறையோ?

நீ வீரத்தால் இறந்தது சிறந்ததாயினும் என்னைத் தனியே விட்டுச் சென்றது தகுதியாகாது என்பான் 'யான் விட' என்றும், இராவணனுடன் போர் செய்து விழுப்புண் பட்டு இறந்தானாதலால் 'சென்ற வீரமும்' என்றும் கூறினான்.

அருணனுக்கு அரம்பை யென்னும் தேவமாதிடம் தோன்றிய இருமுட்டைகளில் பிறந்தவர் சம்பாதியும் சடாயுவும் என்பர்.

நீயே - ஏகாரம் பிரிநிலை. கடனே - ஏகாரம் வினாப் பொருளில் வந்தது. அண்டம் - முட்டை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "When long ago two eggs were laid together,
  2. the two of us came into being; now leaving me,
  3. you alone have gone the way of valour;
  4. is that right, you who surpass even fierce Garuḍa?"

What the poem says

Campāti recalls that he and Caṭāyu hatched from two eggs laid together; tradition makes them sons of Aruṇa, the sun's charioteer. He does not deny that his brother died a hero's death, wounded in battle with Irāvaṇaṉ, but asks how he could leave his brother behind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṭaṉē aṇṭam iraṇṭum muntu uyirttu
iṭu an nāḷ vantu iruvēmum eyti yāṉ
viṭa nīyē taṉic ceṉṟa vīramum
kaṭaṉē veṅ kaluḻaṟkum mēṉmaiyāy.