கம்பராமாயணம் 4733 · கிட்கிந்தா 15.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீர - வீரனே! (இராவணன்) ஒன்றா - (தனக்கு) இணங்கி வராத, மூன்று உலகத்து உளோரையும் - சுவர்க்கம், பூமி, பாதாளம் என்னும் மூவுலகங்களில் உள்ளவர் அனைவரையும்; வென்றான் என்னினும் - வென்றான் என்றாலும்; அவ் அரக்கன் நிற்கு நேர் நின்றானே - (போரில்) அந்த அரக்கனாகிய இராவணன் உனக்கு எதிராக வந்து நின்றானா? நின்னையும் கொன்றானே - உன்னையும் கொன்றானா? இது என்ன கொள்கையோ - இது என்ன வியப்பான நிகழ்ச்சியோ?
மூவுலகத்தையும் வென்ற அந்த இராவணனைவிட நீ மிக்க வலியவனாதலால் அவன் உன்னை எதிர்த்தான் என்பதும், கொன்றான் என்பதும் நம்பத்தக்க நிகழ்ச்சிகளாக இல்லையே என்றான் சம்பாதி.
நின்றானே, கொன்றானே: ஏகாரங்கள் வியப்பொடு வந்த வினாக்கள். கொள்கை: கோட்பாடு, சூழ்ச்சியும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Though he conquered all who dwell in the three worlds
- and would not submit, O hero, could he stand
- against you? Did that demon
- kill even you? What kind of thing is this?"
What the poem says
Campāti cannot believe it. However many worlds Irāvaṇaṉ conquered, Caṭāyu was stronger; it seems impossible that the demon even dared to face him, let alone killed him.