கம்பராமாயணம் 4734 · கிட்கிந்தா 15.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று என்று - (சம்பாதியானவன்) என்று பலவிதமாகக் கூறி; ஏங்கி இரங்கி - மனம் தளர்ந்து வருந்தி, இன்னலால் - துன்பத்தால்; பொன்றும் தன்மை புகுந்தபோது - இறக்கும் நிலையடைந்த போது; அவற்கு - அந்தச் சம்பாதிக்கு; வன்திண் வரை அன்ன தோள் மாருதி - மிக வலிய மலை போன்ற தோள்களையுடைய அனுமன்; ஒன்றும் சொல்கொடு - ஏற்ற சொற்களைக் கொண்டு; உணர்ச்சி நல்கினான் - தேறுதல் கூறினான்.
என்று என்று - அடுக்கு - துயரத்தால் வந்த எண்ணுப் பொருளது. வன் திண்: ஒரு பொருட் பன்மொழி. ஒன்றும் சொல்: துயரத்தைத் தணிப்பதற்கேற்ற சொற்கள். அனுமன் சொல்லின் செல்வனாதலால் ஒன்றும் சொற்கொடு உணர்ச்சி நல்கினான் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying this again and again, sighing and lamenting, as through his grief
- he came to the point of dying, to him
- Māruti, whose strong, firm shoulders are like mountains,
- gave back his senses with fitting words.
What the poem says
As Campāti's grief brings him close to death, Aṉumaṉ comforts him. The commentary recalls Aṉumaṉ's famous title, "master of words": he always knows exactly what to say.