கம்பராமாயணம் 4735 · கிட்கிந்தா 15.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேற்றத் தேறி இருந்த செங்கணான் - (அனுமன்) தேறுதல் மொழி கூறியதனால் மனந் தெளிந்த சிவந்த கண்களையுடைய அந்தச் சம்பாதி; கூற்று ஒப்பான் - யமன் போன்று வலிமையுடைய சடாயு; கொலை வாள் அரக்கனோடு - கொலை புரியும் வாளையுடைய அரக்கனாகிய இராவணனோடு; ஏற்று - எதிர் நின்று; போர் செய்தது - போர் செய்ததற்கு, என் நிமித்து என - காரணம் என்ன என்று வினாவ; காற்றின் சேய் - வாயு குமாரனான அனுமன்; இது கட்டுரைக்கும் - பின்வரும் செய்திகளைக் கூறலானான்.
ஆல்: ஈற்றசை.
சம்பாதி அனுமன் தேறுதல்மொழியால் மனந் தெளிந்து, சடாயு இராவணனோடு போர் செய்த காரணத்தை வினாவ, அனுமன் கூறமுற்பட்டான். நிமித்து: நிமித்தம் (காரணம்). செங்கணான்: கண்கள் சிவந்தமை துயரத்தால் கலங்கியதாலாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Consoled, and calmed, the red-eyed one asked,
- "Why did he face that demon, like Death,
- with his murderous sword, and fight him?"
- and the son of the Wind told him this.
What the poem says
Calmer now, his eyes still red from weeping, Campāti asks why Caṭāyu fought Irāvaṇaṉ at all, a demon as deadly as Death. Aṉumaṉ begins to tell him the story.