கம்பராமாயணம் 4742 · கிட்கிந்தா 15.46

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று என்று ஏங்கி இரங்கி ஈர்ம்புனல்
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்தபின்
வன் திண் தோள் வலி மாறு இலாதவன்
துன்றும் தார் அவர்க்கு இன்ன சொல்லினான்.

பொருள் · Meaning in Tamil

என்று என்று ஏங்கி இரங்கி - என்று பலவாறு ஏக்கங் கொண்டு புலம்பி; இன்புனல் சென்று - இனிய நீர்நிலைக்குச் சென்று; அங்கு ஆடுதல் செய்து - அதில் நீராடுதல் செய்து; தீர்ந்த பின் - முடித்த பிறகு; வல் திண்தோள்வலி - மிக்க திண்ணிய தோள் வலிமையில்; மாறு இலாதவன் - ஒப்பற்றவனாகிய சம்பாதி, துன்றும் தாரவர்க்கு - அடர்த்தியான மாலையைத் தரித்த வானர வீரர்களை நோக்கி; இன்ன சொல்லினான் - பின் வருமாறு கூறலானான்.

சம்பாதி ஒப்பற்ற வலிமையுடையவன் என்பதால் 'தோள்வலி மாறிலாதவன்' என்றார்.

என்று என்று - அடுக்கு, துன்பத்தின் மிகுதியைக் காட்டுவது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying this again and again, sighing and lamenting, he went
  2. to the sweet water and bathed there; and when he had finished,
  3. he who had no equal in the strength of his mighty, firm shoulders
  4. spoke these words to those wearing thick garlands.

What the poem says

Campāti bathes in the sea, the ritual bath and water offering made for the dead, here performed for his brother. Then he turns to speak to the monkeys.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu eṉṟu ēṅki iraṅki iṉpuṉal
ceṉṟu aṅku āṭutal ceytu tīrntapiṉ
vaṉ tiṇtōḷ vali māṟu ilātavaṉ
tuṉṟum tāravarkku iṉṉa colliṉāṉ.