கம்பராமாயணம் 4741 · கிட்கிந்தா 15.45

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான்;
பெற ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவற்கு
இறவு என்னாம்? அதின் இன்பம் யாவதோ?

பொருள் · Meaning in Tamil

எம்பி - என் தம்பியான சடாயு; அறம் அன்னானுடன் - அறக் கடவுளான இராமபிரானோடு; அன்பினோடு உறவு உன்னா - அன்போடு உறவு கொண்டாடி; உயிர் ஒன்ற ஓவினான் - (அவன்திறத்து) தன் உயிரையும் மன நிறைவோடு விட்டான்; பெற ஒண்ணாது - யாரும் அடையமுடியாத, ஓர் பெற்றி - ஒப்பற்ற பேற்றை; பெற்றவர்க்கு - அடைந்தவர்களுக்கு; இறவு என் ஆம் - இறப்பு என்பதுதான் என்ன இழப்பைத் தந்துவிடும்? இதின் இன்பம் யாவதோ - இப் பேற்றைக் காட்டிலும் சிறந்த இன்பம் அளிப்பது வேறு என்ன?

இராமபிரான் பொருட்டு உயிரைக் கொடுக்க நேர்ந்த இப்பேற்றுக்குமுன் மரணமென்பது இழப்பே அன்று என்பது.

தருமமே ஒரு வடிவெடுத்தாற்போல இருப்பதால் இராமனை 'அறமன்னான்' என்றான்.

சடாயு தசரதனுக்குப் பல உதவிகள் செய்து அவனுக்கு உயிர்த் தோழனாகி அவனினும் வயது முதிர்ந்த தமையன் முறையிலிருந்து அவன் மக்களான இராமலக்குவரைத் தன் மக்களாக எண்ணி அன்பைப் பொழிந்தார் என்பதுபற்றி 'அன்பினோடு உறவுன்னா' என்றார்.

யாவதோ: ஓகாரம் எதிர்மறைப் ப்பு வந்த வினா. இறவு: இறப்பு - தொழிற்பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "My brother, bound in love and kinship
  2. with the one who is dharma itself, gave up his life content;
  3. for those who gain a blessing none can gain,
  4. what is death? What joy could be greater than this?"

What the poem says

Caṭāyu had been a close friend of Tacarataṉ and loved Irāmaṉ and Ilakkuvaṉ like his own sons. To die for Irāmaṉ, the embodiment of dharma, is a blessing so great that death means nothing beside it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟam aṉṉāṉuṭaṉ empi aṉpiṉōṭu
uṟavu uṉṉā uyir oṉṟa ōviṉāṉ;
peṟa oṇṇātu ōr pēṟu peṟṟavarkku
iṟavu eṉ ām? itiṉ iṉpam yāvatō?