கம்பராமாயணம் 4740 · கிட்கிந்தா 15.44

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பைந் தார் எங்கள் இராமன் பத்தினி
செந்தாள் வஞ்சி திறத்து இறந்தவன்
மைந்து ஆர் எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு
உய்ந்தான்; அல்லது உலந்தது உண்மையோ?

பொருள் · Meaning in Tamil

மைந்தா - வீரமுள்ளவனே! பைந்தார் எங்கள் இராமன் - பசுமையான மலர்மாலையணிந்தவனான எங்கள் இராமனின்; பத்தினி - மனைவியும்; செந்தாள் வஞ்சி திறத்து - சிவந்த அடிகளையுடைய வஞ்சிக் கொடி போன்றவளுமான சீதையின் பொருட்டு; இறந்தவன் - உயிர் நீத்தவனாகிய, எம்பி - என் தம்பி சடாயு; வரம்பு இல் சீர்த்தியோடு - அளவில்லாத புகழோடு; உய்ந்தான் அல்லது - நல்வாழ்வு பெற்றான் என்று கூறலாமேயல்லாமல்; உலந்தது - இறந்து போனான் என்பது; உண்மையோ - உண்மைப் பொருளாகுமோ?

சீதையை மீட்பதற்குத் தன்னுயிரைக் கொடுத்தவனாதலால் அவனது பூதவுடம்பு அழிந்தும் புகழுடம்பு அழியாது நிலை நிற்கின்றது. ஆதலால், அவன் இறந்தும் இறவாதவனாகவே வாழ்ந்துவருகிறான் என்பது. பசுமை: புதுமை.

செந்தாள் வஞ்சி: பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை; அடையடுத்த உவமையாகு பெயருமாம்.

'தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு' - (5305)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Hero! For the sake of the wife of our Irāmaṉ of the fresh garland,
  2. the vine with red feet, he died;
  3. my brother has been saved, with boundless glory;
  4. can it be true that he has perished?"

What the poem says

Campāti reasons that his brother, having died for Cītai, has not really died at all. His body is gone, but his body of fame endures, so he lives on. The commentary cites a later verse of the epic calling Caṭāyu the one who "sold his life for fame."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pain tār eṅkaḷ irāmaṉ pattiṉi
cen tāḷ vañci tiṟattu iṟantavaṉ
maintā empi varampu il cīrttiyōṭu
uyntāṉ; allatu ulantatu uṇmaiyō?