கம்பராமாயணம் 4739 · கிட்கிந்தா 15.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விளித்தான் - (இவ்வாறு) அனுமன் கூறினான்; அன்னது கேட்டு - அச் சொற்களைக் கேட்டு; வாரி கலுழ்ந்த கண்ணினான் - நீரைச் சொரியும் கண்களையுடையவனான சம்பாதி (அனுமனை நோக்கி); மெய்ம்மையோய் - உண்மை நெறியில் நிற்பவனே; தெளித்து ஆடத்தகு - மனந் தெளிந்து அனுபவித்தற்குரிய; தீர்த்தன் மாட்டு - புனிதனான இராமபிரான் பொருட்டு; உயிர் அளித்தானே - (என் தம்பியான சடாயு) உயிரையும் கொடுத்தானே! அது நன்று நன்று - அந்தச் செயல் மிகவும் நல்லது! எனாக் களித்தான் - என்று மனமகிழ்ந்தான்.
தெளித்து ஆடத்தகு தீர்த்தன் - முழுமுதற் கடவுள் என்று உறுதிகொண்டு சரணமடைவதற்கு ஏற்ற புண்ணிய மூர்த்தி. தெளிந்து என்ற சொல் எதுகை நோக்கி தெளித்து என வலித்தல் விகாரமாயிற்று.
தீர்த்தன்மாட்டு உயிரளித்தான்: சீதையை மீட்டலும் இராம காரியமாகும் என்பது கருதி. அளித்தானே - நன்று நன்று: ஏகாரமும் அடுக்கும் உவகைப் பொருளன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He finished speaking; hearing it, "You who are true!
- He gave his life for the holy one, in whom one may bathe
- with a clear mind! That was good, good!" so
- he rejoiced, though his eyes ran with tears.
What the poem says
Campāti's grief turns to pride. His brother gave his life for Irāmaṉ, the holy one in whom one can trust and take refuge. Even as he weeps, he rejoices that Caṭāyu's death was so noble.