கம்பராமாயணம் 4738 · கிட்கிந்தா 15.42

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மெய்ம்மையோன் - எப்பொழுதும் அறவழியிலேயே நிற்கும் சடாயு; சீறி - கோபித்து; தீயவன் ஏறு தேரையும் கீறி - கொடியவனான அந்த இராவணன் தேரையும் அழித்து; தோள்கள் கிழித்து - (அவன்) தோள்களையும் பிளந்து; அழித்தபின் - அவனுக்குத் தோல்வியை உண்டாக்கின பிறகு; தேறி - (இராவணன் சடாயுவை வெல்லும் நெறியைத்) துணிந்து; தேவர்கள் தேவன் - தேவர்களுக்கும் தேவனான சிவபெருமான்; தெய்வ வாள் வீற - (தனக்கு அளித்த) தெய்வத் தன்மையுள்ள சந்திரகாசம் என்னும் வாள் வெற்றிபெற; பொன்றினன் - சடாயு (சிறகுகள் அறுபட்டு) உயிர்மாய்ந்தான்; என்றான் - என்று (அனுமன்) கூறி முடித்தான்.

சடாயு இராவணனைத் தன் மூக்கினாலும் நகங்களாலும் சிறகுகளாலும் பலவாறு துன்புறுத்தி, இறுதியில் அந்தக் கொடியவனது தெய்வ வாளால் உயிர் மாய்ந்தான் என்றான் அனுமன் என்பது. மும்மூர்த்திகளுள் ஒருவனாதலால் சிவன் 'தேவர்கள் தேவன்' எனப்பட்டான். வீறு என்ற சொல் பிறிதொன்றுக்கும் இல்லாத சிறப்பினைக் குறிக்கும். சிவபெருமான் கொடுத்தருளிய வாள் வீறுபெற (சிறப்பான வெற்றிபெற) என்றது அவ்வாளின் ஒப்பரிய சிறப்பினைப் புலப்படுத்திற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "In his fury he tore apart the chariot the evil one rode,
  2. ripped open his shoulders and defeated him; then,
  3. resolved, the evil one used the divine sword of the god of gods,
  4. and by its power the truthful one perished," he said.

What the poem says

Aṉumaṉ completes the story. Caṭāyu wrecked Irāvaṇaṉ's chariot and wounded him, but Irāvaṇaṉ used Candrahāsa, the sword given him by Śiva, the "god of gods," and it killed Caṭāyu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cīṟit tīyavaṉ ēṟu tēraiyum
kīṟit tōḷkaḷ kiḻittu aḻitta piṉ
tēṟit tēvarkaḷ tēvaṉ teyva vāḷ
vīṟap poṉṟiṉaṉ meymmaiyōṉ' eṉṟāṉ.