கம்பராமாயணம் 4737 · கிட்கிந்தா 15.41

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனைக்
கண்டான் உம்பி அறம் கடக்கலான்
'வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு'எனாத்
திண் தேரானொடு எதிர்ந்து சீறினான்.

பொருள் · Meaning in Tamil

கொண்டு ஏகும் - சீதையைக் கவர்ந்து செல்லும்; கொலை வாள் அரக்கனை - கொலை செய்யும் வாளேந்திய இராவணனை; நும்பி கண்டான் - உன் தம்பி பார்த்தான்; அறம் கடக்கலான் - தருமநெறி தவறாதவனான அவன்; வண்டு ஆர் கோதையை - வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய அச் சீதையை; வைத்து நீங்கு - விட்டுவிட்டு அப்பாலே செல், எனா - என்று கூறி; திண்தேரான் எதிர் சென்று - வலிய தேரையுடைய அந்த இராவணன் எதிரே சென்று; சீறினான் - மனங் கொதித்து எதிர்த்தான்.

அறங் கடக்கலான்: இந்த அடைமொழி பிறர் மனைவியைக் கவர்வதைக் கண்டு மனங்கொதிப்பதற்கு ஏற்றவன் என்ற கருத்தைப் புலப்படுத்தும்.

'அறங் கடவாத சடாயுவை அறநெறி நின்றுளோர்க்கெலாம் மாணியை' - (3449) என முன்னும் கூறினார். 'சொல்லிய அறநெறி தொடர்ந்து தோழமை நல்லியல் அருங்கடன் கழித்த நம்பியை' - (3451) என்றதும் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Your brother, who never strays from dharma, saw
  2. the demon with his murderous sword carrying her off;
  3. crying 'Put down the lady with the bee-filled garland and go,'
  4. he flew at the one in the mighty chariot in fury."

What the poem says

Caṭāyu, true to dharma, could not stand by while another man's wife was stolen. He ordered Irāvaṇaṉ to release Cītai and attacked his chariot. The commentary cites two earlier verses of the epic that praise Caṭāyu in the same terms.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'koṇṭu ēkum kolai vāḷ arakkaṉaik
kaṇṭāṉ numpi aṟam kaṭakkalāṉ
'vaṇṭu ār kōtaiyai vaittu nīṅku' eṉāt
tiṇ tērāṉ etir ceṉṟu cīṟiṉāṉ.