கம்பராமாயணம் 4744 · கிட்கிந்தா 15.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நல்ல சொல் வல்லீர் - (மேலும், சம்பாதி அந்த வானர வீரர்களை நோக்கி) இன்சொல் கூறுகின்றவரும்; வாய்மை வளர்க்கும் மாண்பினீர் - சத்தியத்தை வளர்க்கும் பெருமை பெற்றவர்களுமாகிய வானர வீரர்களே! எல்லீரும் - நீங்கள் அனைவரும்; அவ்இராம நாமமே சொல்லீர் - அந்த 'இராம' என்னும் திருநாமத்தையே வாயால் உச்சரிப்பீர்களாக! சொல்ல - (அவ்வாறு என்னருகில்) சொல்வதனால்; எனக்கு - எனக்கு, ஓர் சோர்வு இலா - ஒரு சிறிதும் தாழ்வில்லாத; நல் ஈரப் பயன் - நல்ல (அந்த இராமனின்) அருளாகிய பயன்; நண்ணும் - கைகூடும்.
'என்றான்' என்று அடுத்த செய்யுளோடு தொடர்ந்து முடியும். இராம நாமம் ஓதியதால் சம்பாதியின் சிறகு ர. படத் செய்தி. கம்பர் படைப்பு; வான்மீகத்தில் இல்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "All of you, speak only that name of Irāmaṉ;
- as you say it, an unfailing blessing of grace
- will come to me; you who are skilled in good words,
- you who are great in fostering truth."
What the poem says
Campāti asks the monkeys to chant Irāmaṉ's name. The commentary notes that the scene of Campāti's wings regrowing at the sound of the name is Kampaṉ's own invention and is not in Vālmīki.