கம்பராமாயணம் 4745 · கிட்கிந்தா 15.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றான் - என்று (சம்பாதி) கூறினான் (அதுகேட்ட வானரர்கள்); யாம் அன்னது காண்டும் எனா - நாங்கள் அதைக் காண்போம் என்று சொல்லி; நின்றார் நின்றுழி - நின்றவர் நின்றபடியே; நீலமேனியான் - நீலமேனியையுடைய இராமனது; நன்று ஆம் நாமம் - நன்மையை அருளும் 'இராம' என்னும் திருநாமத்தை; நவின்று நல்கினார் - உச்சரித்துதவினார்கள் (அதனால்); வன் தோளான் சிறை - வலிய தோள்களையுடைய சம்பாதியின் சிறகுகள்; வானம் தாய - வானளாவித்தாவி வளர்ந்தன.
'ஏ': ஈற்றசை.
இராம கைங்கரியத்தில் துணைபுரிய வேண்டுமென்ற கருத்தினாலேயே சம்பாதிக்கு வெந்த சிறகை முளைத்திட அப்போதே முனிவர் அருள் புரியவில்லை யென்பதும், இந்த வானர வீரரோடு பேச்சு நிகழ்கையில்தான் அந்தச் சம்பாதியின் சிறகு முளைத்தது என்பதும் வான்மீகத்தால் பெறப்படும். நன்றாம் நாமம்: திருமாலின் ஆயிர நாமங்களுள் சிறந்ததான 'இராம நாமம்' என்பதும் பொருந்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So he said; "We shall see that," they replied,
- and standing just where they stood, they gave the good name
- of the one whose body is dark blue, chanting it,
- and the strong-shouldered one's wings spread across the sky.
What the poem says
The monkeys chant the name of Irāmaṉ, and at once Campāti's wings grow back, filling the sky. The commentary explains that the sage had delayed his healing so that he could serve Irāmaṉ's cause at this moment.