கம்பராமாயணம் 4746 · கிட்கிந்தா 15.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் - புகையோடு கூடிய நெருப்பைக் கக்கும் வாளானது; உறை பெற்றால் எனல் ஆம் - ஓர் உறையைப் பெற்றது என்று சொல்லத் தக்க; உறுப்பினான் - அலகினைப் பெற்றவனாகிய சம்பாதி; திகழ்கின்ற மேனியான் - விளங்கும் உடம்பையுடையவனாய்; முறை பெற்று ஆம் - வரிசையாகப் பொருந்தி; உலகு எங்கும் மூடினான் - உலகங்கள் எல்லாவற்றிலும் பரவித் தன் சிறகுகளால் மூடியவனாய்; நிறை பெற்று - வலிமை பெற்று; சிறை பெற்றான் - (தனது கரிந்துபோன) சிறகுகள் (முன்போல) வளரப் பெற்றான்.
கருகிப்போன சிறகுகள் மீண்டும் வளர்ந்தன, உலகையே மூடும் அளவுக்கு பெரிய சிறகுகள் வளர்ந்தன என்பதாம். முறை பெற்று ஆம் உலகு - ஒன்றன்பின் ஒன்றான வரிசையில் அமைந்த உலகங்கள்.
மூடுதல் - உள்ளடக்கிக் கவிந்து கொள்ளுதல். அங்கம் இங்கே அலகு; வாயிடை இணைந்த அலகுக்கு உறையிட்ட வாள் உவமையாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He regained his wings, his body shining;
- he covered all the worlds that lie in their order;
- restored to strength, he had a beak like a sword
- that breathes smoky fire, now set in its sheath.
What the poem says
Campāti's new wings are so vast they seem to cover all the worlds. His fierce beak, held in his jaws, is compared to a sword that breathes fire, now fitted into its scabbard.