கம்பராமாயணம் 4747 · கிட்கிந்தா 15.51

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அது கண்ட வானரர்கள்) தெருண்டான் மெய்ப் பெயர் - (ஞானியர்களால் பரம் பொருள் என்று) தெளியப்பட்டவனாகிய இராமனது பயன்தரும் திருநாமத்தை; செப்பலோடும் - (அந்த வானர வீரர்கள்) உச்சரித்த அளவிலே; வந்து உருண்டான் - (முன்பு இறகு இல்லாமல்) உருண்டு வந்தவனாகி சம்பாதி; உற்ற பயத்தை - (அப்போது) அடைந்த (சிறகுகள் பெற்ற) நன்மையை; உன்னினார் - (மனத்தில்) கருதினர்; மருண்டார் - வியப்பால் திகைப்புற்றனர்; வெருண்டார் - அச்சமுற்றனர்; வானவர் கோனை வாழ்த்தினார் - தேவர்களின் தலைவனான திருமாலின் அவதாரமாகிய இராமபிரானை வாழ்த்தித் துதித்தார்கள்; சிந்தை வியந்து விம்முவார் - ஆச்சரியத்தால் மனம் பூரித்தனர்.

சம்பாதி இறகில்லாமல் உருண்டு வந்ததையும், இராம நாம உச்சரிப்பால் சிறகுகள் தழைத்ததையும் நேரிலே கண்ட வானரர்கள் அச்சமும் வியப்பும் மருட்சியும் ஒருங்கே கொண்டவர்களாய் அப் பெரும்பயனை விளைக்கும் பெருமை வாய்ந்த இராமனை வாழ்த்தினர் என்பது. மெய்ப் பெயர்: தாரக மந்திரம். பயன்: பயன் தனது திருநாமத்தால் வேண்டிய பயனை விளைத்தது கொண்டு இராமன் மானுடனல்லன்; தேவாதி தேவனான முழுமுதற் கடவுளே' என்ற ஞானத்தைப் பெற்ற வானரர்கள், அத் தேவனுடைய முற்றுணர்வு, வரம்பிலாற்றல், யாவரையும் பாதுகாக்கும் திறம், அழியாவியல்பு முதலிய குணங்களைக் கருதி அவற்றில் ஈடுபட்டு ஆழ்ந்து பக்தி வயப்பட்டுத் தம்மையும் மறந்து, இத்திருமேனிக்கு எவ்வாற்றானும் ஒரு த வராதிருக்க வேண்டும் என்று பரிவால் வாழ்த்துவாராயினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as they spoke the true name of the one known to the wise,
  2. they pondered the blessing that came to the one who had come rolling along;
  3. they were bewildered; they praised the lord of the gods;
  4. they were awestruck, their hearts swelling with wonder.

What the poem says

Seeing Campāti, who had to shuffle along the ground, suddenly winged again at the sound of Irāmaṉ's name, the monkeys are amazed, a little frightened and filled with devotion. They realise that Irāmaṉ is no mere man but the supreme god, and they praise him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teruṇṭāṉ meyp peyar ceppalōṭum vantu
uruṇṭāṉ uṟṟa payattai uṉṉiṉār
maruṇṭār vāṉavar kōṉai vāḻttiṉār
veruṇṭār cintai viyantu vimmuvār.