கம்பராமாயணம் 4748 · கிட்கிந்தா 15.52

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னானைக் கடிது அஞ்சலித்து - (வானர வீரர்கள்) சிறகு பெற்ற அந்தச் சம்பாதியை விரைந்து கை கூப்பி வணங்கி; முன்னாள் உற்றது - முன்காலத்து நடந்த வரலாறு; நீ முற்றும் ஓது - நீ முழுவதையும் கூறுவாய்; எனச் சொன்னார் - என்று வேண்டினார்கள்; சொற்றது சிந்தை தோய்வுற - அவர்கள் கூறியது மனத்தில் பதிய; தன்னால் உற்றது - தனக்கு நேர்ந்ததை (இறகு கரிந்த காரணத்தை); தான் - அந்தச் சம்பாதி; விளம்புவான் - (பின்வருமாறு) சொல்வானாயினான்.

சம்பாதியை வானரர்கள் அஞ்சலித்தது - அவன் இராமநாமத்தின் பெருமையைத் தமக்குத் தெரிவித்தவனாதலாலும், இராமனுக்குப் பெரிய தந்தை முறையாகி அவனது திருவருளைப் பெற்றவனாதலாலும், மிகவும் வயது முதிர்ந்தவனாதலாலும் என்பது.

தன்னால் - உருபு மயக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Quickly joining their palms before him, "Tell us everything
  2. that happened to you in former days,"
  3. they said; and as their words sank into his mind,
  4. he himself began to tell what had befallen him.

What the poem says

The monkeys bow to Campāti with joined hands. He has shown them the power of Irāmaṉ's name, he stands as an elder uncle to Irāmaṉ, and he is very old. They ask how he lost his wings, and he begins his story.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉāṉaik kaṭitu añcalittu' nī
muṉ nāḷ uṟṟatu muṟṟum ōtu' eṉac
coṉṉār; coṟṟatu cintai tōyvuṟa
taṉṉāl uṟṟatu tāṉ viḷampuvāṉ.