கம்பராமாயணம் 4749 · கிட்கிந்தா 15.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாய் எனத் தகைய நண்பீர் - அன்பு காட்டுவதில் தாய் என்று சொல்லத்தக்க நண்பர்களே! பாய்திரைப் பரவை ஞாலம் - வீசும் அலைகளையுடைய கடலால் சூழப் பெற்ற நிலவுலகத்தில்; படர் இருள் பருகும் பண்பின் - பரவிய இருட்டை விழுங்கும் (போக்கும்) தன்மையுடைய, ஆய் கதிர்க் கடவுள் - சிறந்த கதிர்களோடு கூடிய சூரிய தேவனது; தேர் ஊர் - தேரைச் செலுத்தும் சாரதியான; அருணனுக்கு - அருணனுக்கு; அமைந்த மைந்தர் - பிறந்த மக்களாகிய; சம்பாதி சடாயு என்பேம் - சம்பாதி சடாயு என்ற நாங்கள் இருவரும்; சேய் ஒளிச்சிறைய - அழகிய நிறத்தைக் கொண்ட சிறகுகளையுடைய; வேகக் கழுகினுக்கு - வேகமாகப் பறக்கும் கழுகுகளுக்கு; அரசு செய்வேம் - அரசராக இருந்து ஆட்சி செய்தவர்கள்.
கதிரவனின் சாரதியாகிய அருணனுக்கு மக்களாகப் பிறந்த சம்பாதி சடாயு என்ற நாங்கள் வானத்தில் உயரப் பறக்கும் இயல்புடைய கழுகுகளுக்கெல்லாம் அரசராகவிருந்தோம் என்று சம்பாதி கூறினான் என்பது.
அருணன்: சூரியனுக்குச் சாரதி; காசியப முனிவன் மனைவியான விநதையின் வயிற்றில் பிறந்தவன்; கருடனுக்குத் தமையன்; இடைக்குக் கீழே உறுப்பில்லாதவன். இச்செய்யுள் முதல் 4706 ஆம் செய்யுள் முடிய உள்ள ஏழு பாடல்களை ஐந்து சீர் கொண்டவையாகப் பிரித்துக் கலித்துறை என்றும் கொள்வர்.
நண்பீர்: ஈர் - முன்னிலைப் பன்மை விகுதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Friends as kind as a mother! We were called Campāti and Caṭāyu;
- we ruled as kings over the swift vultures with wings of lovely colour;
- we were sons born to Aruṇaṉ, who drives the chariot
- of the radiant sun-god, whose nature is to drink up the darkness spread over the sea-girt earth."
What the poem says
Campāti begins his story. He and Caṭāyu were sons of Aruṇa, the charioteer of the sun, and ruled together as kings of the vultures. Aruṇa, brother of Garuḍa, is said to have no body below the waist.