கம்பராமாயணம் 4750 · கிட்கிந்தா 15.54

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆய்உயர் உம்பர் நாடு - (நாங்கள் இருவரும்) வானத்திலுள்ள அந்தத் தேவலோகத்தை, காண்டும் என்று அறிவு தள்ள - சென்று காண வேண்டுமென்று எங்கள் அறிவுதூண்ட; மீ உயர் விசும்பின் ஊடு - மேலே உயர்ந்து விளங்கும் ஆகாய வழியே; மேக்கு உறச் செல்லும் வேலை - மேலே மிக உயர்ந்து பறந்து (நாங்கள்) சென்ற போது; காய் கதிர்க் கடவுள் - எரிக்கும் கதிர்களையுடைய சூரிய தேவனது; தேரைக் கண்ணுற்றேம் - தேரினைக் கண்களால் கண்டோம்; கண்ணுறாமுன் - அவ்வாறு நாங்கள் பார்ப்பதற்குள்; தீயையும் தீக்கும் - நெருப்பையும் எரித்து அழிக்கவல்ல; தெய்வச் செங்கதிர்ச் செல்வன் - தெய்வத் தன்மையுள்ள சிவந்த கதிர்களையுடைய அந்தக் கடவுள்; சீற - கோபங் கொண்டு.

நாங்கள் இருவரும் மிக உயரப் பறக்கும் வல்லமை பெற்றிருந்தமையால் வானுலகத்தைக் காணவேண்டுமென்ற பேரார்வத்தால் வானத்தில் பறந்து சூரிய மண்டலத்தைக் குறுகச் சூரியனைக் காணவிருக்கும்போது, பூலோகத்திலிருந்து நாங்கள் வந்ததால் அக்கடவுள் எங்களைக் கோபித்தான் என்று சம்பாதி கூறினான் என்பது. தீயையும் தீக்கும் தெய்வச் செங்கதிர்ச் செல்வன்: வெம்மையின் மிகுதியை விளக்கும் உயர்வு நவிற்சியணி. அகரச்சுட்டு யகர மெய்பெற்று 'ஆயுயர்' (ஆய் உயர்) என்று வந்தது.

மீயுயர்: (மீ உயர்) ஒரு பொருட்பன்மொழி. தீயையும்: உம்மை உயர்வு சிறப்பு. தேர்: ஒற்றைச் சக்கரத் தேர் (கதிரவன் தேருக்குச் சக்கரம் ஒன்று, குதிரைகள் ஏழு என்பது புராண மரபு)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "As our minds urged us on, 'We shall see the high world of the gods,'
  2. and we flew upward through the lofty sky,
  3. we caught sight of the chariot of the scorching sun; before we could even look,
  4. the god of the red rays that burn even fire flared in anger."

What the poem says

Out of youthful eagerness to see the world of the gods, the two vultures flew so high that they came near the sun's chariot. The sun-god, so hot he could burn fire itself, was angered at creatures from earth coming so close. The sentence continues into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āy uyar' umpar nāṭu kāṇṭum' eṉṟu aṟivu taḷḷa
mī uyar vicumpiṉūṭu mēkku uṟac cellum vēlai,
kāy katirk kaṭavuḷ tēraik kaṇṇuṟṟēm; kaṇṇuṟāmuṉ
tīyaiyum tīkkum teyvac ceṅ katirc celvaṉ cīṟa,