கம்பராமாயணம் 4752 · கிட்கிந்தா 15.56

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மண்ணிடை விழுந்த என்னை வான் இடை வயங்கும் வள்ளல்
கண்ணிடை நோக்கி உற்ற கருணையன்,'சனகன் காதல்
பெண் இடை ஈட்டின் வந்த வானரர், இராமன் பேரை
எண் இடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி'என்றான்.

பொருள் · Meaning in Tamil

மண்ணிடை விழுந்த என்னை - அவ்வாறு தரையில் விழுந்த என்னை; வானிடை வயங்கு வள்ளல் - வானத்தில் விளங்குகின்ற கதிரவன்; கண்ணிடை நோக்கி - கண்களால் பார்த்து; உற்ற கருணையான் - என்மீது கொண்ட இரக்கத்தால்; சனகன் காதல் பெண் - சனகனின் அன்பு மகளான சீதை; இடையீட்டின் வந்த - (இராமனைவிட்டுப்) பிரிதலால் அவளைத் தேடிக் காண்பதற்காக வரும், வானரர் - வானர வீரர்கள்; இராமன் பேரை - இராமபிரான் திருநாமத்தை, எண்ணிடை உற்ற காலத்து - மனத்தினாற் கருதி உச்சரிக்குங் காலத்தில்; இறகு பெற்று எழுதி - நீ உன் இறகுகளை மீண்டும் பெற்றுப் பறந்து செல்வாய்; என்றான் - என்று அருள்புரிந்தான்.

தன் வெம்மையான கதிர்களால் சிறகுகள் தீய்ந்து கீழே விழுந்துவிட்ட என்னைக் கண்டு, கதிரவன் இரக்கப்பட்டு 'இராமன் மனைவியான சீதையைத் தேடுவதற்காக வானர வீரர்கள் இங்கு வந்து உன் வேண்டுகோளுக்கிணங்க இராம நாமத்தையுச்சரிக்க, அப்போது இழந்த சிறகுகள் மீண்டும் தளிர்க்கப் பெற்று எழுவாய்' என்று அருள் புரிந்தான் எனச் சம்பாதி கூறினான்.

மண்ணிடை, வானிடை, கண்ணிடை: இவற்றில் இடையென்பது இடம் என்னும் பொருளது.

தனக்கு அருள் தத்து முன்னிட்டுக் கதிரவனை 'வள்ளல்' என்று குறித்தான். இடையீடு - பிரிவு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "As I lay fallen on the earth, the generous one who shines in the sky
  2. looked on me with his eyes, full of compassion, and said:
  3. 'When monkeys come searching for Caṉakaṉ's beloved daughter, parted from her husband,
  4. and call to mind the name of Irāmaṉ, you will regain your wings and rise.'"

What the poem says

Here the blessing comes from the sun himself, who took pity on the fallen bird and promised that his wings would grow back when monkeys searching for Cītai spoke Irāmaṉ's name. An earlier verse's commentary credited the promise to the sage Niśākara instead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṇiṭai viḻunta eṉṉai vāṉiṭai vayaṅku vaḷḷal
kaṇṇiṭai nōkku uṟṟa karuṇaiyāḷaṉ, 'caṉakaṉ kātal
peṇ iṭai īṭṭiṉ vanta vāṉarar, irāmar pērai
eṇṇiṭai uṟṟa kālattu, iṟaku peṟṟu eḻuti' eṉṟāṉ.