கம்பராமாயணம் 4753 · கிட்கிந்தா 15.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உம்பரும் உவக்கத் தக்கீர் - தேவர்களும் மகிழத்தக்க தொழிலையுடையவர்களாகிய; நம்பிமீர் - சிறந்த வானர வீரர்களே! இடரின் வீழ்வான் - (என் துன்பத்தைக் கண்டு) துயரத்தில் மூழ்கியவனாகிய; எம்பியும் - என் தம்பியான சடாயுவும்; ஏயது மறுக்க அஞ்சி - (நான் ஏவியதை) மறுக்க அஞ்சியவனாய்; அம்பரத்து இயங்கும் - வானத்தில் சஞ்சரிக்கின்ற, யாணர்க் கழுகினுக்கு - வலிய கழுகுகளுக்கு; அரசன் ஆனான் - அரசன் ஆயினான்; ஈது என் தன்மை - இதுவே எனது வரலாறு; நீர் இவண் அடைந்த ஆற்றை - நீங்கள் இங்கு வந்த வரலாற்றை; உணர உணர்த்துமின் - (நான்) உணரும்படி கூறுக; என்றான் - என்று கூறி முடித்தான்.
யாணர்: அழகு (புதுமை). இங்கு 'வலிமை' என்று பொருள்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "My brother too, sunk in grief, fearing to refuse what I bid him,
- became king of the vultures, rich in strength, who range the sky.
- Noble ones, this is my story. Now, you who would gladden even the gods,
- tell me how you came here, so that I may know."
What the poem says
Campāti ends his story. Since he could no longer rule, he told Caṭāyu to take his place as king of the vultures, and Caṭāyu obeyed. Now Campāti asks the monkeys to tell him why they have come.