கம்பராமாயணம் 4754 · கிட்கிந்தா 15.58

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்றலும், இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி, "எந்தாய்!
புன் தொழில் அரக்கன், மற்று அத் தேவியைக் கொண்டு போந்தான்,
தென் திசை" என்ன உன்னித் தேடி நாம் வருதும்'என்றார்;
'நன்று; நீர் வருந்தல் வேண்டா; நான் அது நவில்வன்'என்றான்.

பொருள் · Meaning in Tamil

என்றலும் - என்று சம்பாதி வினாவியவுடனே (அவ் வானரர்); இராமன்தன்னை ஏத்தினர் இறைஞ்சி - இராமபிரானைத் துதித்து வணங்கி (சம்பாதியை நோக்கி), எந்தாய் - எம் தந்தை போன்றவனே! புன்தொழில் அரக்கன் - இழிதொழிலைச் செய்யும் அரக்கனாகிய இராவணன்; அத் தேவியை - அந்த இராமபிரான் தேவியான சீதையை; தென் திசை - தென்திசை வழியாக; கொண்டு போந்தான் என்ன - கொண்டு சென்றான் என்று; உன்னி - நினைத்து; நாம் தேடி வருதும் என்றார் - நாங்கள் அச்சீதையைத் தேடிக் கொண்டு வருகிறோம் என்று கூறினர்; நன்று - (அது கேட்ட சம்பாதி) நல்லது; நீர் வருந்தல் வேண்டா - நீங்கள் வருந்தாதீர்கள்; நான் அது நவில்வென் - நான் இதுபற்றி அறிந்துள்ளதைக் கூறுவேன்; என்றான் - என்று கூறத் தொடங்கினான்.

பிறர் மனைவியைக் கவரும் தீக்குணமுடையவனாதலால் இராவணனைப் 'புன் தொழிலரக்கன்' என்றார். மற்று: அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that, praising and bowing to Irāmaṉ, they said, "Father,
  2. the demon of base deeds carried that queen away
  3. to the south, so we thought, and we have come searching";
  4. "Good; do not grieve; I will tell you about it," he said.

What the poem says

The monkeys explain that they believe Irāvaṇaṉ took Cītai south and that they have been searching for her. Campāti tells them not to despair: he has news.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum, irāmaṉ taṉṉai ēttiṉar iṟaiñci, "entāy!
puṉ toḻil arakkaṉ, maṟṟu attēviyaik koṇṭu pōntāṉ,
teṉ ticai" eṉṉa uṉṉit tēṭi nām varutum' eṉṟār;
'naṉṟu; nīr varuntal vēṇṭā; nāṉ atu navilveṉ' eṉṟāṉ.