கம்பராமாயணம் 4755 · கிட்கிந்தா 15.59

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பாகு ஒன்று குதலையாளை - சர்க்கரைப் பாகு போன்ற மழலைச் சொற்களையுடைய சீதையை; பாதக அரக்கன் - கொடிய அரக்கனான இராவணன்; பற்றிப் போகின்றபொழுது - கவர்ந்து செல்லுகின்ற போது; கண்டேன் - (நான்) பார்த்தேன்; இலங்கை புக்கனன் - (அவன்) இலங்கையிற் போய்ச் சேர்ந்தான்; புக்கு - (அங்குச் சென்று); வேகின்ற உள்ளத்தாளை - தவிக்கின்ற மனமுடைய அந்தச் சீதையை; வெஞ்சிறையகத்து வைத்தான் - கொடிய சிறைக் காவலில் வைத்துவிட்டான்; இறைவி - தலைவியான சீதை; இன்னும் ஆங்கே இருந்தனள் - இப்பொழுதும் அங்கேதான் இருக்கின்றாள்; ஏகுமின் காண்டிர் - (நீங்கள்) அங்கே சென்று காணுங்கள்.

ஏகுமின் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The one whose prattle is like sweet syrup, the wicked demon seized,
  2. and I saw them as they went; he entered Ilaṅkai, and there
  3. he put her, her heart burning, in a cruel prison;
  4. go and you will see her; the queen is there still."

What the poem says

The decisive news of the whole canto. Campāti saw Irāvaṇaṉ carry Cītai off, knows he took her to Ilaṅkai, and tells the monkeys that she is still held there. After their long, fruitless journey, the searchers at last learn where she is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāku oṉṟu kutalaiyāḷaip pātaka arakkaṉ, paṟṟip
pōkiṉṟa poḻutu kaṇṭēṉ; pukkaṉaṉ ilaṅkai, pukku
vēkiṉṟa uḷḷattāḷai veñ ciṟaiyakattu vaittāṉ;
ēkumiṉ, kāṇṭir; āṅkē iruntaṉaḷ iṟaivi iṉṉum.