கம்பராமாயணம் 4759 · கிட்கிந்தா 15.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காக்குநர் இன்மையால் - (தம்மைப்) பாதுகாப்பவர் இல்லாமையால், அக்கழுகு இனம் முழுதும் - அந்தக் கழுகுக் கூட்டங்கள் அனைத்தும்; கன்றி - வருத்தமுற்று; சேக்கை விட்டு - (தம்) இருப்பிடங்களை விட்டு; இரியல் போகி - நிலைகெட்டுத் தடுமாறிப் போய்; திரிதரும் - அலைந்து வாடும்; அதனைத் தீர்ப்பான் - அத் துயரத்தை நீக்கும் பொருட்டு; போக்கு எனக்கு அடுத்த - போவது நான் செய்யத்தக்க செயலாகும்; நண்பீர் - நண்பர்களே! நல்லது புரிமின் - (நான் கூறிய இரண்டனுள்) நன்மைதரக் கூடியதைச் செய்யுங்கள்; என்னா - என்று கூறி; சிறையினால் விசும்பு போர்ப்பான் - (தன்) சிறகுகளால் வானத்தை மறைப்பவனாகிய அச் சம்பாதி; மேக்கு உற - மேலே பொருந்த; விசையின் சென்றான் - விரைவாகப் பறந்து போனான்.
'இது வரையில் சடாயுவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கழுகுகள் அச் சடாயு இறந்ததால் பாதுகாப்பாரில்லாமல் எளியவற்றை வலியவை வாட்ட, நிலைகெட்டு வருந்தும்; ஆதலால், அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு நான் விரைந்து செல்ல வேண்டியுள்ளது. அதனால்தான் செல்லுகின்றேன்; நீங்கள் நான் சொல்லியவற்றுள் ஏற்றதைச் செய்யுங்கள்' என்று கூறிச் சம்பாதி வான்வழியாகப் பறந்து சென்றான் என்பது.
சேக்கை - பறவைகளின் கூடு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "With no one to guard them, the whole tribe of vultures, distressed,
- will leave their roosts, scatter and wander; to put an end to that,
- it falls to me to go. Friends, do what is good," he said,
- and he went swiftly upward, the one whose wings cover the sky.
What the poem says
With Caṭāyu dead, the vultures have no king to protect them, and the strong will prey on the weak. Campāti must go to rule them again. He leaves the monkeys to choose between his two options and soars away. This ends the canto of Campāti.