கம்பராமாயணம் 4758 · கிட்கிந்தா 15.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவ் இலங்கை மூதூர் - பழமையான அந்த இலங்கைக்கு; எல்லீரும் - நீங்கள் எல்லோரும்; சேறல் என்பது - (ஒருமிக்கப்) போய்ச் சேர்வது என்பது; எளிது அன்று - எளிய செயலில்லை; வல்லீரேல் - (ஆனால்) திறமைமிக்கவராக இருந்தால்; ஒருவர் ஏகி - (உங்களுக்குள்) வல்லமையுடைய ஒருவர் மட்டும் (தனித்துச்) சென்று; அவண் மறைந்து ஒழுகி - (அங்குள்ளவர்கள் அறியமுடியாதபடி) அங்கே மறைந்து (சீதையைத் தேடும்) செயல்புரிந்து; வாய்மை சொல்லீரே - இராமன் கூறிய உண்மை மொழிகளைச் சொல்லியவர்களாய்; தோகையைத் தெருட்டித் துயரை நீக்கி - சீதைக்குத் தெளிவூட்டித் துன்பத்தைப் போக்கி; மீள்திர் - திரும்புங்கள்; அல்லீரேல் - இல்லாவிட்டால் (உங்களில் ஒருவர் போகவில்லையென்றால்); என் சொல் தேறி - நான் கூறிய வார்த்தையில் நம்பிக்கை வைத்து; அழகற்கு உணர்த்துமின் - அழகுள்ள அந்த இராமபிரானிடம் (சீதை இலங்கையில் இருப்பதைத்) தெரிவியுங்கள்.
அம்மா: அசை. 'அம்ம' என்பதன் நீட்டல். எல்லீரும்: முன்னிலைப் பன்மைப் பெயர். சொல்லீர் - முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "For all of you to go to that ancient city of Ilaṅkai is not easy;
- if you are able, let one of you go, move there in secret, and, speaking
- words of truth, take away the peacock's sorrow, comfort her, and return;
- if you cannot, trust my word and tell the handsome one."
What the poem says
Campāti gives two options. Either one capable monkey crosses to Ilaṅkai alone, finds Cītai in secret, comforts her with Irāmaṉ's message and returns; or, if no one can manage that, they simply go back and report to Irāmaṉ what Campāti has told them.