கம்பராமாயணம் 4757 · கிட்கிந்தா 15.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நான்முகத்து ஒருவன் - (நான்கு திசைகளையும் நோக்க) நான்கு முகங்களைக் கொண்ட பிரமதேவன்; மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் - மற்றொரு மூர்த்தியான பார்வதியை இடப்பாகத்திற் கொண்ட சிவன்; பால்முகப் பரவை - பாலைத் தன்னிடங் கொண்டுள்ள திருப்பாற் கடலில்; பள்ளிப் பரம்பரன் பணி என்றாலும் - பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டுள்ள சிறந்த திருமால் ஆகியோரின் பொருட்டுச் செய்யும் வேலையை யாயினும்; காலனுக்கேயும் - (அவ்வளவு ஏன்) யமனுங் கூட; சேறல் அரிது - (அந்தப் பணியை நிறைவேற்றிட) உள்ளே புகுந்து செல்லுதல் என்பது முடியாததாகும்; இது காவல் தன்மை - (ஏனெனில்) இது (இலங்கையின்) கட்டுக் காவல் தன்மையாகும்; விளிவு இல் நாளீர் - அழிவில்லாத நீண்ட ஆயுட் காலத்தையுடையவர்களே! மேல் உமக்கு உறுவது - இனிமேல், உங்களுக்கு நேரக் கூடியவற்றை; எண்ணிச் செல்லுமின் - முன்னரே ஆராய்ந்து பார்த்துச் செல்லுங்கள்.
மும்மூர்த்திகளின் பொருட்டுச் செய்யும் பணியாக இருப்பினும் அதனைச் செய்து முடிப்பதற்காக இலங்கைக்குள் புகுவது இயமனுக்குக் கூட முடியாது. ஆகவே, இது பற்றி முன்னரே ஆராய்ந்து முடிவெடுத்துத் தக்கவாறு செய்யுங்கள் என்றான் சம்பாதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Even if it were a task for the four-faced one, or for the lord who has a woman as half his body,
- or for the supreme one who lies on his couch in the sea of milk,
- for Death himself to go there is hard, such is its guard;
- think of what may befall you later, and then go, you whose days are long."
What the poem says
Ilaṅkai is guarded so closely that even Death could not get inside, even on an errand for Brahmā, Śiva or Viṣṇu. Campāti urges the monkeys to think carefully before they attempt it.