கம்பராமாயணம் 4762 · கிட்கிந்தா 16.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சூரியன் - கதிரவனின்; வெற்றிக் காதலனோடும் - வெற்றியோடு விளங்கும் மைந்தனான சுக்கிரீவனோடும்; சுடர் விற்கை ஆரியனை - ஒளிபொருந்திய வில்லைக் கையிற் கொண்டவனான சிறந்த இராமனையும்; சென்று தொழுது - (பணியை முடிக்காமல்) போய் வணங்கி; உற்றது அறைகிற்பின் - நிகழ்ந்த செய்திகளைச் சொல்வோமானால், சீர்நிலை முற்றும் - சிறந்த (நமது) கடமை ஒருவாறு முடிவுபெறும்; (ஆயினும்) தேறுதல் - (நாமே கடல் கடந்து சீதையுள்ள இடத்தைக் கண்டு) தெளிவது; கொற்றச் செயல் - வீரச் செயலாகும்; (ஆதலால்) வாரி கடப்போர் யாவர் - கடலைக் கடக்கின்ற வல்லமையுள்ளவர் நம்மிலே யார் உள்ளார்; என - என்று சொல்லி; தம் வலி சொல்வார் - தத்தம் வலிமையை எடுத்துக் கூறலானார்கள்.
சீதையை நேரிலே கண்டு மீண்டு செய்தி தெரிவித்தலே சிறந்ததென்பதைக் குறிக்கும்.
வாரி: கடல்; அம்மா: வியப்பிடைச் சொல். ஆரியன்: பெருமைக்குறியவன்.
இராமபிரானை ஆரியன் என்று குறிப்பது இந்நூலில் பெருவழக்காகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If we go to the Sun's victorious son and to the noble one
- with the shining bow in his hand, bow before them and report what has happened,
- our duty will be done after a fashion; but to find out for certain is the deed of valour!
- Who among us can cross the sea?” And so they began to state their own strength.
What the poem says
The monkey search party has reached the southern shore and learned from Campāti that Cītai is held in Ilaṅkai across the sea. The leaders weigh their choice: they could go back to Cukkirīvaṉ, the Sun's son, and to Irāmaṉ and simply report what they have heard, which would discharge their task in a way. But the heroic course is to cross the sea and see Cītai with their own eyes. So each begins to say how far his own strength will reach. Āriyaṉ, "the noble one", is the poet's favourite title for Irāmaṉ.