கம்பராமாயணம் 4773 · கிட்கிந்தா 16.14

Section கிட்கிந்தா காண்டம் / 16. மயேந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மூ உலகேனும் - மூன்று உலகங்களில் உள்ளோர்களும்; போர்முன் எதிர்ந்தால் - போர்க்களத்தில் உம் முன்னே எதிர்த்து வந்தாலும்; பொருள் ஆகா - ஒரு பொருட்டாகா; ஓர்வு இல் - பிறரால் உணர்வதற்கரிய; வலம் கொண்டு - பெருவலிமைகொண்டு; ஒல்கல் இல் வீரத்து - தளராத வீரத்தன்மையால், உயர்தோளீர் - சிறந்து விளங்கும் தோள்களையுடையீர்! பார் உலகு எங்கும் - இந்தப் பூமியோடு மற்ற உலகங்கள் எங்கிலுமுள்ள; பேர் இருள் - மிக்க இருளை; சீக்கும் பகலோன்முன் - ஒழிக்கின்ற சூரியன் எதிரே; தேர்முன் நடந்தே - அவனது தேர்க்கு முன்னே நடந்து கொண்டே; ஆரிய நூலும் - வடமொழி நூல்கள் அனைத்தையும்; தெரிவுற்றீர் - கற்றறிந்து கொண்டீர்.

அனுமன் சூரியதேவனிடம் வியாகரணம் முதலிய கலைகளைக் கற்க விரும்ப, அவன் தான் எப்பொழுதும் வானவீதி வழியே உலகங்களைச் சுற்றிச் செல்பவனாதலால், தான் ஓரிடத்திலிருந்து அவனுக்குப் பாடம் சொல்ல இயலாது என்று கூற, அனுமன் அவன் எதிர் முகமாய் நடந்து சென்றே பாடங்கேட்டு நவவியாகரண பண்டிதன் ஆனான்.

பாருலகு: பாராகிய உலகு: இருபெயரொட்டுப் பண்புத் தொகை. சீத்தல்: அழித்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “If they face you in battle, even the three worlds count for nothing;
  2. you of lofty shoulders, with strength beyond knowing and valour that never wavers;
  3. walking before the chariot of the Sun, who drives off the great darkness
  4. over the earth and all the worlds, you mastered the Sanskrit treatises too.”

What the poem says

Cāmpavaṉ reminds Aṉumaṉ that all three worlds together could not stand against him. He also recalls how Aṉumaṉ got his learning. He wished to study grammar and the other sciences with the Sun god, but the Sun said he could not stop his daily journey across the sky to teach. So Aṉumaṉ walked backwards in front of the Sun's chariot, facing his teacher the whole way, until he had mastered all nine schools of grammar.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pōrmuṉ etirntāl mū ulakēṉum poruḷ ākā;
ōrvu il valam koṇṭu olkal il vīrattu uyar tōḷīr;
pār ulaku eṅkum pēr iruḷ cīkkum pakalōṉmuṉ,
tēr muṉ naṭantē, āriya nūlum terivuṟṟīr.'