கம்பராமாயணம் 4774 · கிட்கிந்தா 16.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீதியில் நின்றீர் - நீதிநெறியில் நிலை பெற்றுள்ளீர்; வாய்மை அமைந்தீர் - சத்திய நெறியால் பொருந்தியுள்ளீர்; மாதர் நலம் - மகளிர் இன்பத்தை; நினைவாலும் - மனத்தாலும்; பேணாது வளர்ந்தீர் - எண்ணாது வளர்ந்துள்ளீர்; மறை எல்லாம் - வேதங்களையெல்லாம்; ஓதி உணர்ந்தீர் - கற்று அவற்றின் பொருள்களையும் அறிந்துள்ளீர்; ஊழி கடந்தீர் - பிரம கற்பமான ஊழிக் காலத்தையும் கடந்த ஆயுளையுடையீர்; உலகு ஈனும் - உலகங்களைப் படைக்கின்ற; ஆதி அயன்தானே என - முதற் கடவுளான பிரம தேவனே நீரென்று; யாரும் அறைகின்றீர் - யாவரும் சொல்லக் கூடிய சிறப்புடையீர்
அனுமன் நித்தியப் பிரமச்சாரியாதலால் 'நினைவாலு மாதர்நலம் பேணாது வளர்ந்தீர்' என்றும், சிரஞ்சீவி யாதலால் 'ஊழி கடந்தீர்' என்றும், அடுத்த பிரம பட்டத்தைப் பெறக் கூடியவனாதலால் 'ஆதியயன்தானே யென யாரும் அறைகின்றீர்' என்றும் கூறப் பெற்றான். 'நினைவாலும்' என்றது மற்ற சொல்லாலும், செயலாலும் என்பதை உள்ளடக்கிய உயர்வுகுறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “You stand firm in justice; you are grounded in truth; even in thought
- you have grown up without seeking the pleasures of women; all the Vedas
- you have recited and understood; you outlast the ages; everyone
- proclaims you are the primal Ayaṉ himself, who brings forth the worlds.”
What the poem says
More praise from Cāmpavaṉ. Aṉumaṉ is just and truthful. He is a lifelong celibate who has never desired a woman even in thought, which implies he has not done so in word or deed either. He knows the Vedas, will live beyond the end of the age, and is so great that people call him Piramaṉ (Ayaṉ), the creator. Tradition holds that Aṉumaṉ is destined to hold the office of Piramaṉ in a future age.