கம்பராமாயணம் 4775 · கிட்கிந்தா 16.16

Section கிட்கிந்தா காண்டம் / 16. மயேந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அண்ணல் அமைந்தாற்கு அன்பு சிறந்தீர்; அதனானே
கண்ணி உணர்ந்தீர் கருமம்; நுமக்கே கடன் என்னத்
திண்ணிது அமைந்தீர்; செய்து முடிப்பீர்; சிதைவு இன்றால்;
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்.'

பொருள் · Meaning in Tamil

அண்ணல் அம் மைந்தர்க்கு - பெருமையில் சிறந்த அந்த இராம, இலக்குவரிடத்தில்; அன்பு சிறந்தீர் - பேரன்புடையீர்; அதனானே - அக் காரணத்தால்; கருமம் கண்ணி உணர்ந்தீர் - செய்ய வேண்டிய செயலை ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்; நுமக்கே கடன் என்ன - (சீதையைத் தேடிச் செய்தியறிந்து வருவது) உமக்கே கடனாகுமென்று; திண்ணிது அமைந்தீர் - உறுதியாக ஏற்றுக் கொண்டீர்; சிதைவு இன்று - செயல் செய்வதில் அழிவு இல்லை; செய்து முடிப்பீர் - எனவே செயலைச் செய்து முடிப்பீர்; புண்ணியம் ஒன்றே - புண்ணியம் ஒன்றையே; என்றும் நிலைக்கும் பொருள் - எப்பொழுதும் அழியாமல் நிலைக்கக் கூடிய பொருளென்று; கொண்டீர் - (மனத்தில் உறுதியாகக்) கருதியிருக்கின்றீர்

வானரர் யாவரும் இறப்பதாக இருந்த நிலையில் அதனைத் தடுத்து அனுமன் பின்னுந் தேடுமாறு ஆலோசனை கூறும் பொழுது சீதையுள்ள இடம் தெரிந்தனராதலால் 'கண்ணியுணர்ந்தீர் கருமம்' என்றான் சாம்பவான். 'சிதைவின்றிச் செய்து முடிப்பீர்' - நீரே இலங்கையிற் சென்று சீதையின் செய்தியை உணர்ந்து வருந்தொழிலைச் செய்து முடிக்க வேண்டுமென்பது குறிப்பு. 'இன்றி' என்னும் வினையெச்சம் செய்யுளாதலால் 'இன்று' எனத் திரிந்து வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “You excel in love for those noble princes; and because of that
  2. you have thought the task through and understood it; you have firmly accepted
  3. that it is your own duty; you will carry it through without fail;
  4. you hold that merit alone is the thing that lasts for ever.”

What the poem says

Aṉumaṉ's love for Irāmaṉ and Ilakkuvaṉ makes him see clearly what has to be done and take the task on as his own. Cāmpavaṉ recalls that it was Aṉumaṉ who, when the monkeys were ready to starve themselves to death in despair, persuaded them to keep searching, and that is how they learned where Cītai is. Now Cāmpavaṉ hints that Aṉumaṉ himself must go to Ilaṅkai and finish the work, since he values merit above everything else.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṇṇal am maintarkku aṉpu ciṟantīr; ataṉāṉē
kaṇṇi uṇarntīr karumam; numakkē kaṭaṉ eṉṉat
tiṇṇitu amaintīr; ceytu muṭippīr; citaivu iṉṟāl;
puṇṇiyam oṉṟē eṉṟum nilaikkum poruḷ koṇṭīr.'