கம்பராமாயணம் 4776 · கிட்கிந்தா 16.17

Section கிட்கிந்தா காண்டம் / 16. மயேந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காலம் அது அன்றேல் - அது ஏற்ற காலமல்லாவிட்டால்; அடங்கவும் வல்லீர் - அடங்கியிருக்கும் வல்லமையுடையீர்; அமர் வந்தால் - போர் மூளுமானால்; மடங்கல் முனிந்தாலன்ன - ஓர் ஆண் சிங்கம் சினந்து எழுந்தாற் போல; வலத்தீர் - வலிமையுடையவராவீர்; மதி நாடி - அறிவினால் ஆராய்ந்து பார்த்து; தொடங்கியது ஒன்றோ - செய்யத் தொடங்கிய ஒரு செயல்மட்டுமோ; முற்றும் முடிக்கும் தொழில் அல்லால் - அதற்குத் தொடர்பான எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கும் தொழில்திறமுடையவரேயல்லாமல்; இடம் கெட - பெருமையழியும்படி; வெவ்வாய் ஊறு கிடைத்தால் - கொடிய இடையூறு நேர்ந்தாலும்; இடையாதீர் - (அஞ்சிப்) பின்வாங்காது நிற்பீர்.

தொடங்கியதொன்றோ - ஓகாரம் எதிர்மறைப் பொருளது. இடங்கெடல்: சமயத்தில் மாறுபடுதல். ஊறு: துன்பம், தடை - உறு என்னும் முதனிலைத் திரிந்து தொழிற்பெயர்

'ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து' (486) 'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து' (490) 'அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற, இடுக்கண் இடுக்கட் படும்' (625) என்னும் குறட்பாக்களின் கருத்துக்கள் இச் செய்யுளில் பொதிந்துள்ளவாறு காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “When the time is not right, you can hold yourself back; when war comes,
  2. you have the might of a lion roused to fury; having weighed things with your mind,
  3. you do not merely begin a deed, you carry the whole of it to its end;
  4. and if cruel harm befalls you so that all seems lost, you do not falter.”

What the poem says

Cāmpavaṉ praises Aṉumaṉ's timing and persistence: he knows when to lie low and when to spring like an angry lion, and he finishes everything he begins, never giving way however bad the setback. The commentary points out that the verse gathers up ideas from the Tirukkuṟaḷ: the energetic man draws back like a ram before it charges, he waits still as a heron and strikes at the right moment, and troubles that come to an undaunted man are themselves troubled.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṭaṅkavum vallīr kālam atu aṉṟēl; amar vantāl
maṭaṅkal muṉintālaṉṉa valattīr; mati nāṭit
toṭaṅkiyatu oṉṟō, muṟṟum muṭikkum toḻil allāl
iṭam keṭa vev vāy ūṟu kiṭaittāl iṭaiyātīr.'