கம்பராமாயணம் 4780 · கிட்கிந்தா 16.21

Section கிட்கிந்தா காண்டம் / 16. மயேந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நீயிரே நினைவின் முன்னே நெடுந்திரைப் பரவை ஏழும்
தாய், உலகு அனைத்தும் வென்று, தையலைத் தருதற்கு ஒத்தீர்;
"போய் இது புரிதி " என்று புலமை தீர் புன்மை காண்டற்கு
ஏயினிர் என்னின், என்னின் பிறந்தவர் யாவர் இன்னும்?'

பொருள் · Meaning in Tamil

நீயிரே - நீங்கள்; நினைவின் முன்னம் - நினைப்பதற்குமுன்பே (மிக விரைவில்); நெடுந்திரை பரவை ஏழும் தாய் - பெரிய அலைகளையுடைய ஏழு கடல்களையும் தாண்டி; உலகு அனைத்தும் வென்று - எல்லாவுலகங்களையும் வெற்றிகண்டு; தையலைத் தருதற்கு ஒத்தீர் - சீதையை மீட்டுக் கொண்டு வருவதற்கு வல்லமையுடையீர் ஆவீர்கள்; போய் இது புரிதி என்று - (அவ்வாறான ஆற்றல் பெற்ற நீங்களே) நீ சென்று இதைச் செய் என்று; புலமை தீர் புன்மை காண்டற்கு - அறிவற்ற எனது தாழ்வினைக் காண்பதற்காக, ஏயினீர் என்னின் - (என்னை இச் செயலில்) ஏவினீர் எனினும்; என்னின் பிறந்தவர் இன்னும் யாவர் - என்னைப் போலப் பிறந்த பயனையடைந்தவர் வேறு யார் உள்ளார்? (ஒருவரு மில்லை; யானே பிறந்த பயனைப் பெற்றேன் என்பது).

இந்தச் சிறிய ஒரு கடலையேயல்லாமல் ஏழு கடல்களையும் வெல்ல வேண்டுமென்றாலும் அவ்வாறே செய்து சீதையை மீட்கும் வல்லமையுடையவர் நீரென்று மற்ற வானரர்களது வலிமை மிகுதியை முதல் மூன்றடிகளால் தெரிவித்தான் அனுமன் என்பது.

'ஏயினீரென்னின் என்னிற் பிறந்தவர் யாவரின்னும்' - மிக்க வலியவர்களாய்க் கடல்கடந்து மீண்டு வரும் வல்லமையுள்ளார் பலரிருக்கவும் என்னை ஏவினது எனது பேறென்று பணிவு புலப்படுத்தியவாறு. சாம்பவானே சீதையைத் தேடிக் கண்டுவரும் ஆற்றல் உடையவன் என்பது, தன்னை ஏவியதால் தன் அறிவின் குறைவு இத்தன்மையது என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு தனக்கு ஏற்பட்டது என்பதும் அனுமன் கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “You yourselves, quicker than thought, could leap all seven seas of towering waves,
  2. conquer every world and bring back the lady;
  3. if you have bidden me, ‘Go and do this,’ only to see how small
  4. my poor wisdom is, who else has ever been born as fortunate as I?”

What the poem says

Aṉumaṉ answers with humility. Any of the monkey leaders, he says, could cross not just this one sea but all seven, conquer the worlds and bring Cītai back. If they have chosen him instead, perhaps to show him how little he really knows, then he counts himself the luckiest creature ever born. He turns the praise back on his companions and accepts the task as a privilege, not a boast.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nīyirē niṉaiviṉ muṉṉam neṭun tiraip paravai ēḻum
tāy, ulaku aṉaittum veṉṟu, taiyalait tarutaṟku ottīr;
"pōy itu puriti" eṉṟu pulamai tīr puṉmai kāṇṭaṟku
ēyiṉir eṉṉiṉ, eṉṉiṉ piṟantavar yāvar iṉṉum?'