கம்பராமாயணம் 4781 · கிட்கிந்தா 16.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இலங்கையை - (அனுமன் சாம்பவானைப் பார்த்து) இலங்கை நகரை; வேரோடு இடந்து - வேரோடு பெயர்த்தெடுத்து; இவ்வயின் தருக என்றாலும் - இந்த இடத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்று (நீங்கள்) கூறினாலும்; விலங்கினர்தம்மை எல்லாம் - எதிர்த்துத் தடுப்போரையெல்லாம்; வேரொடும் விளிய நூறி - அடியோடு அழியுமாறு பொடிப் பொடியாக்கி; பொலங் குழை மயிலை - பொன்னாற் செய்த குழையையணிந்த மயில்போன்ற சாயலையுடைய சீதையை; கொண்டு போது என - எடுத்துக் கொண்டுவா என்று; புகன்றிட்டாலும் - சொன்னாலும்; உரைத்த மாற்றம் முடிக்குவல் - (நீங்கள்) கூறிய சொற்படியே செய்து முடிப்பேன்; கடிது காண்டிர் - (அதை) விரைவிலே கண்கூடாகக் காண்பீர்கள்; கலங்கலீர் - (ஆகவே) கலங்காதீர்கள்.
கடலைக் கடந்து சீதையைக் கண்டு வருதல் எவ்வாறு முடியுமென்ற சிந்தை உங்களுக்குச் சிறிதும் வேண்டா என்ற கருத்துப்படக் 'கலங்கலீர்' என்றார். முடிக்குவல்: தன்மையொருமை எதிர்கால வினைமுற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Even if you say, ‘Tear up Ilaṅkai by its roots and bring it here,’
- or command, ‘Crush all who block your way so they perish root and branch,
- and come back with the peacock who wears golden earrings,’
- do not be troubled! I will do just as you say, and quickly; you shall see.”
What the poem says
Now Aṉumaṉ speaks with full confidence. Whatever they ask, whether to uproot the whole city of Ilaṅkai and carry it here, or to destroy every opponent and bring Cītai back himself, he will do it, and soon. Cītai is the "peacock with golden earrings", a figure for her grace. He tells them not to worry at all about how the crossing is to be done.