கம்பராமாயணம் 4786 · கிட்கிந்தா 16.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தார் நிழல் பரப்பும் தோளான் - மாலைகள் நிழல் பரப்பும் தோள்களையுடைய அனுமன்; நிழல் பார் பரப்பும் பொன்தேர் - தனது ஒளியை உலகெங்கும் பரப்புகின்ற அழகான தேரையும்; வெயில் கதிர் - வெப்பமான கதிர்களையுமுடைய; பரிதி மைந்தன் - சிறந்த கதிரவன்; போர் நிழல் பரப்பும் - போரில் தமது வலிமையை வெளிப்படுத்துகின்ற; மேலோர் புகழ் என - மாவீரரின் புகழ் (உலகமெங்கும் பரவுவது) போல, உலகம் புக்கு - உலக முழுவதும் சுற்றி (ஒளி செய்து); தடங்கடல் தாவா முன்னம் - பெரிய மேற்குக் கடலிற் சென்று சேருவதற்குமுன்பே; நீர்நிழல் உவரி தாவி - நீர்மயமான அழகிய இக்கடலைக் கடந்து; இலங்கைமேல் செல்ல - இலங்கை நகருக்குச் சென்று சேரும்படி; நின்றான் - (மகேந்திரமலையில்) ஆயத்தமாக நின்றான்.
அனுமன் சூரியன் மறைவதற்குள் இலங்கையிற் சென்று சேரவேண்டுமென்ற கருத்தோடு மகேந்திர மலையின் உச்சியிலேறிப் பேருருவங் கொண்டு சித்தமாக நின்றான் என்பது. சூரியன் தன் கதிர்களால் உலகமுழுவதும் ஒளி செய்வதற்குப் பெருவீரர்புகழ் உலகமெங்கும் பரவுதலை உவமை கூறினார்.
உலகம் புக்குத் தாவா முன்னம் செல்ல நின்றான் என இயையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before the excellent Sun, with his golden chariot that spreads light over the earth and his hot rays,
- having passed through the world as the fame of great men spreads who show their might in war,
- could leap into the wide western sea, he whose shoulders spread the shade of garlands
- stood ready to leap the watery salt sea and go on to Ilaṅkai.
What the poem says
Aṉumaṉ, in his giant form on the summit of Mayēntiram, stands ready to jump. He means to reach Ilaṅkai before the Sun, having lit the whole world the way a hero's fame spreads everywhere, sinks into the western ocean. The verse marks the time of day and the urgency of the leap.