கம்பராமாயணம் 48 · பால 2.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தோயும் வெண்தயிர் - தோய்ந்துள்ள வெண்மையான தயிரைக் (கடைகின்ற), மத்து ஒலி துள்ளவும் - மத்தின் ஓசை விட்டுவிட்டு ஒலிக்கவும்; ஆய வெள்வளை - (தம் கைகளில் அணிந்துள்ள) நுட்பமான வேலைப்பாடுடைய வெண்ணிறச் சங்கு வளையல்கள்; வாய் விட்டு அரற்றவும் - வாய்திறந்து கத்துவதுபோல ஒலிக்கவும்; தேயும் நுண் இடை - மெலிந்த சிறிய இடை; சென்று வணங்கவும் - முன்புறமாக வளையவும்; ஆயர் மங்கையர் - இடைக்குல மகளிர்; அங்கை வருந்துவார் - அழகிய கைகள் வருந்தும்படி கடைவார்கள்.
வெண்டயிர் - கடைதலுக்கும் செந்தயிர் உண்டலுக்கும் உரியன.
துள்ளுதல்: விட்டுவிட்டு ஒலித்தல். ஆய் வளை: நுட்பமான வேலைப்பாடு கொண்ட வளையல்கள்: 'ஒய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்' என்பது தொல்காப்பியம். (தொல். சொல். உரி. 32)
தன்மை நவிற்சியணி
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the thud of the churning stick leaping in the set white curd,
- the finely wrought white bangles crying out aloud,
- the slender, wasted waist bending forward,
- the cowherd women churn until their lovely hands ache.
What the poem says
A simple scene from the pastoral country, described just as it is, a figure called natural description. The cowherd women churn the white curd to make butter. The churning stick thuds in rhythm, the finely carved conch-shell bangles on their arms clatter as if crying out, and their slender waists bend forward with each pull, until their hands ache from the work. White curd is for churning; the red curd mentioned earlier is for eating.