கம்பராமாயணம் 49 · பால 2.29

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குற்ற பாகு கொழிப்பன; கோண் நெறி
கற்றிலாத கரும் கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து தம் முன்றிலில்
சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே.

பொருள் · Meaning in Tamil

கோள் நெறி கற்றிலாத - ஆடவரின் இதயம் கவர்ந்து கொள்ளும் வழியைக் கற்றறியாத; கருங்கண் நுளைச்சியர் - கருமை நிறமான கண்களை உடைய நெய்தல் நிலத்துப் பெண்கள்; குற்ற பாகு கொழிப்பன - தறிக்கப்பட்ட பாக்கிலிருந்து கொழித்து நீக்கப்படுபவை; முற்றில் ஆர முகந்து - சிறிய முறங்களில் வாரி வந்து; தம் முன்றிலில் சிற்றில் கோலி - தம் வீட்டின் முற்றத்தில் சிறு வீடு கட்டி; சிதறிய முத்தமே - சிந்துகின்ற முத்தங்களே யாகும்.

முற்றத்தில் முத்துக்களைக் கொண்டு பேதைப் பருவத்து சிறுமியர் சிற்றில் அமைக்கின்றன. பின்னர் குற்றிய பாக்குகளைச் சிறு முறத்தால் நிறைய வாரிக் கொழிக்கின்றனர் கொழிக்கும் போது நீக்கப் படுவன எவை? சிற்றில் அமைக்க உதவிய முத்துகளே கொழித்து நீக்கப்படுகின்றன.

நெய்தல் நிலத்து முத்தையும் மருத நிலத்துப் பாக்கையும் மயங்க (கலந்திட)ச் செய்து இப்பாடலின் கற்பனை இயங்குவதால் திணை மயக்கம்.

பாகு: இடைக்குறை. கோள் - முதனிலை நீண்ட தொழிற் பெயர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What is sifted out from the pounded areca nuts, as the girls who have not yet learned
  2. the ways of winning hearts, the dark-eyed daughters of the fisherfolk,
  3. scoop it up into small winnowing trays in their courtyards,
  4. is nothing but the pearls they scattered building their little play-houses.

What the poem says

Young girls of the seashore, too young yet to know the arts of capturing men's hearts, build little play-houses of pearls in their courtyards. Later, when they winnow pounded areca nuts in small trays, what they sift out and throw away as grit is those same pearls.

Pearls belong to the seashore and areca nuts to the farmland, so the verse mixes the produce of two regions, the "mixing of landscapes" seen earlier.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṟṟa pāku koḻippaṉa; kōḷ neṟi
kaṟṟilāta karuṅ kaṇ nuḷaicciyar
muṟṟil āra mukantu tam muṉṟilil
ciṟṟil kōlic citaṟiya muttamē.