கம்பராமாயணம் 4830 · சுந்தர 2.42

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தள்ளற்கு அரும் நல் சிறை மாடு தழைப்பொடு ஓங்க,
எள்ளற்கு அரும் நல் நிறம் எல்லை இலாது பொங்க,
வள்ளல் கடலைக் கெடநீக்கி, மருந்து வௌவி,
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசு ஏயும் ஒப்ப!

பொருள் · Meaning in Tamil

தள்ளற்கு அரும்நல்சிறை - பிறரால் வெட்ட முடியாத நல்ல இறக்கைகள்; மாடு தழைப்பொடு ஓங்க - பக்கத்தில் செழிப்புடன் உயரவும்; எள்ளற்கு அரு நன்னிறம் - இகழ்ச்சி இல்லாத நல்ல வண்ணம்; எல்லை இலாது புல்ல - மிகுதியாகத் தழுவி விளங்கவும்; வள்ளல் கடலைக் கெட நீக்கி - வளமான கடலரசன் தோற்றுப்போகவென்று அவனை விலக்கி, மருந்து வவ்வி - தேவாமிர்தத்தை அபகரித்து; உள்உற்று எழும் - கடலுக்குள் புகுந்து மேலே எழுந்து வருகின்ற; ஓர் உவணத்து அரசேயும் ஒக்க - ஒப்பற்ற கருடராசனைப் போல.

தள்ளற்கு அரு - வெட்டமுடியாத தன் தலையைத் தள்ளத் தரும் என்றவாள்பூட்டிய தடங்கையினன் (திருத்தொண்டர் அந் - 14) மைந்நாகமலை - இந்திரனின் வச்சிரத்தால் வெட்டப்படாமையையும் கருடன் சிறகும் அங்ஙனமே இருத்தலையும் அறிக. கடலை - ஐ - அல் வழிச் சாரியை - கடல் கெட என்க. கெட - தோற்றுப்போக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With its fine wings, which none could cut away, rising luxuriant at its sides,
  2. and its flawless colour spreading over it without limit,
  3. it was like the king of the eagles, who, thrusting the bountiful sea aside to its defeat
  4. and seizing the nectar, plunged in and rose up again.

What the poem says

Maiṉṉākam is one of the few mountains that still has its wings. Long ago Intiraṉ cut off the wings of all the flying mountains with his thunderbolt, but Maiṉṉākam escaped by hiding in the sea. So, rising with its wings spread, it looks like Garuḍa, king of the birds, coming up out of the ocean with the stolen nectar after defeating its guardians.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḷḷaṟku arum nal ciṟai māṭu taḻaippoṭu ōṅka,
eḷḷaṟku aru nal niṟam ellai ilātu pulla,
vaḷḷal kaṭalaik keṭanīkki, maruntu vavvi,
uḷ uṟṟu eḻum ōr uvaṇattu aracēyum okka!