கம்பராமாயணம் 4829 · சுந்தர 2.41

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நூல் ஏந்து கேள்வி நுகரார், புலன் நோக்கல் உற்றார்
போல் ஏந்தி நின்ற தனி ஆண்மை பொறாது நீங்கக்,
கால் ஆழ்ந்து அழுந்திக், கடல் புக்குழி, கச்சம் ஆகி
மால் ஏந்த ஓங்கும் நெடு மந்தர வெற்பு மானா!

பொருள் · Meaning in Tamil

நூல் ஏந்துகேள்வி நுகரார் - நூல்களால் கூறப்பெறும் அறிவை உட்கொள்ளாமல்; புலன் நோக்கல் உற்றார்போல் - புலன்வழியே சென்று உலகைப் பார்ப்பவரைப் போன்று; ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க - ஏந்தி நின்ற ஒப்பற்ற நிலமகள் மேனி பொறாமல் விலகிச் செல்ல (அதனாலே); கால் ஆழ்ந்து அழுந்தி - அடிப்பாகம் கீழே சென்று முழுகி; கடல் புக்குழி - கடலில் புகுந்த இடத்தில்; கச்சம் ஆகி - ஆமை வடிவம் கொண்டு; மால்ஏந்த ஓங்கும் - திருமால் ஏந்துவதால் கடலுக்கு மேல் வந்த; நெடுமந்தர வெற்பு மான - பெரிய மந்தரமலையை ஒப்ப,

புலன்வழிச்சென்றவர் போல் ஆண்மை நீங்க, அதனால் கடலில் அழுந்தும்போது ஆமை உருக்கொண்ட திருமாலால் தாங்கப்பெற மேல்வந்த மந்தரமலை போல

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like those who do not take in the learning the books contain and give themselves to the senses,
  2. when the matchless one who bore it could not endure its body and slipped away,
  3. its base sank down and plunged into the sea, and then Māl became a tortoise
  4. and lifted it, and up rose the tall mountain Mantaram: so it looked!

What the poem says

Maiṉṉākam rising from the waves is compared to Mount Mantaram at the churning of the ocean. When the churning began, the mountain was too heavy for its support and slid down into the sea, as people who ignore the teaching of the scriptures and follow their senses sink. Then Tirumāl took the form of a tortoise, got under it, and raised it up again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūl ēntu kēḷvi nukarār, pulaṉ nōkkal uṟṟār
pōl ēnti niṉṟa taṉiyāḷ mey poṟātu nīṅkak,
kāl āḻntu aḻuntik, kaṭal pukkuḻi, kaccam āki
māl ēnta ōṅkum neṭu mantara veṟpu māṉa!