கம்பராமாயணம் 4828 · சுந்தர 2.40

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மீஓங்குசெம்பொன்முடி ஆயிரம் - வானம் அளாவிய பொன் மயமான ஆயிரம் சிகரங்கள் (கிரீடங்கள்), மின் இமைப்ப - ஒளி விளங்கவும்; ஓயாஅருவித் திரள் - வற்றாத அருவிகளின் கூட்டம்; உத்தரியத்தை ஒப்ப - மேலாடையை ஒத்திருக்கவும்; தீயோர் உளர்ஆகியகால் - கொடியவர்கள் தோன்றும் காலத்தில்; அவர் தீமை தீர்ப்பான் - அவர்களால் பெருகும் தீமையை அழிக்கும் பொருட்டு; மாயோன் - (எங்கும் மறைந்துள்ள) திருமால்; மகரக் கடல் நின்று எழும் மாண்பது ஆகி - மீன்கள் உலாவும் கடலிலிருந்து எழுகின்ற சிறப்பை உடையதாய். ஆயிரம் சிகரங்களையும் அருவித் திரள்களையும் பெற்ற மைந்நாகமலை, ஆயிரம் முடிகளையும் உத்தரியத்தையும் உடைய திருமாலை ஒத்தது. தீயோர்களின் தீமையை அழிக்கத் திருமால் அரவணையிலிருந்து எழும் காட்சியைப் பரவசப்பட்டுப் பேசுவார் கம்பர். முடி - மலைச்சிகரம்; இங்கே கிரீடம் என்னும் பொருளைத் தரும். புருஷ சூக்தம் இறைவனின் ஆயிரம் முடியைச் சிறப்பித்துப் பேசும். தாரார் முடியாயிரம் (சடகோபரந்தாதி) “சஹஸ்ர சீர்ஷ புருஷ”

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With its thousand towering crowns of red gold flashing like lightning,
  2. its unceasing streams of waterfalls like an upper cloth,
  3. it had the majesty of the Māyōṉ, who, whenever evil ones arise, to end their evil,
  4. rises up out of the sea of makaras!

What the poem says

Maiṉṉākam, with a thousand golden peaks and its waterfalls hanging like a shawl over its shoulders, looks like Tirumāl rising from his serpent bed in the ocean to destroy evil. The thousand peaks recall the thousand crowned heads of the cosmic Person in the Vedic Puruṣa hymn.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mī ōṅku cempoṉ muṭi āyiram miṉ imaippa,
ōyā aruvit tiraḷ uttariyattai oppat,
tīyōr uḷar ākiyakāl avar tīmai tīrppāṉ,
māyōṉ, makarak kaṭalniṉṟu eḻum māṇpatu āki!