கம்பராமாயணம் 4827 · சுந்தர 2.39

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இ - இந்த; நாகம்அன்னான் - மலையை ஒத்த அனுமன்; எறிகால் எனஏகும் வேலை - பெருங்காற்றைப் போலப் போகின்ற சமயத்தில்; மைந்நாகம் என்னும் மலை - மைந்நாகம் என்று பேசப்படும் மலையானது; தி(க்)நாகமாவில் - எட்டுத் திசைகளிலும் உள்ள யானைகளுக்குள்; செறி கீழ்த்திசை - (மேகம்) செறிந்துள்ள கிழக்குத் திசையில்; காவல் செய்யும் கைநாகம் - பாதுகாக்கும் ஐராவதம் என்னும் மலை; அந்நாள் - பழங்காலத்தில்; கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற - கடலில் எழுந்து வந்த காட்சியானது புலப்பட; வானுற வந்தது - ஆகாயம் அளாவும்படி தோன்றிற்று.

பாற்கடல்கடைந்தபோது ஐராவதம் என்னும் யானை (கடலிலிருந்து) வெளிப்பட்டாற்போல மைநாகமலை அனுமனுக்கு எதிரே வெளிப்பட்டது. திக் நாகம் - திந்நாகம். மைநாகம் என்னும் சொல் எதுகை நயம் கருதி மைந்நாகம் என அமைக்கப் பெற்றது. நாகமாவில் - யானை என்னும் விலங்குகளில். மாவில் செறி கீழ்த்திசை - சிறந்த ஒளி செறிந்த கிழக்குத்திசை என்று கூறுவாரும் உளர். அன்று, ஏ - அசைகள். கம்பன் அடிப்பொடி அவர்கள் இத்தகைய பாடல்களை அளவியற் கலிநிலைத்துறை என்பர். இத்தகைய பாடல்கள் கம்பராமாயணத்தில் 128 பாடல்கள் உள்ளன. (மணிமலர் 1976)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As this one, who was like a mountain, went on like a hurling wind,
  2. so that it looked like the sight of that day when the trunked elephant that guards
  3. the cloud-thick east among the elephants of the directions came up out of the sea,
  4. the mountain called Maiṉṉākam rose up to touch the sky.

What the poem says

A new episode begins. As Aṉumaṉ speeds on, Mount Maiṉṉākam (Maināka) rises out of the sea in front of him, reaching the sky. The poet compares its emergence to Airāvatam, the elephant who guards the eastern quarter, rising from the ocean of milk when the gods churned it. The metre also changes here.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1in nākam aṉṉāṉ, eṟi kāl eṉa ēkum vēlait,
tinnāka māvil ceṟi kīḻtticai kāval ceyyum
kain nākam, annāḷ kaṭal vantatu ōr kāṭci tōṉṟa
mainnākam eṉṉum malai vāṉ uṟa vantatu aṉṟē!